திங்கள், 14 அக்டோபர் 2013 அன்று ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள், வீடியோ கான்பரன்சிங் மூலம் ‘வளரும் சந்தைகள் மன்றத்தின் 2013ஆம் ஆண்டின் உலகலாவிய கூட்டத்தில்2013( Global Meeting of the Emerging Markets Forum) உரையாற்ற உள்ளார் . ஸ்ரீ மோடியின் பேச்சு உள்ளூர் நேரம் காலை 8:30 மணிக்கு ஆரம்பிக்கும் (இது 6:30 PM IST ) . ஸ்ரீ மோடி அவர்கள் ‘சிறந்த ஆளுமை :. ஒரு ஜனநாயகத்தில் முடிவுகளை பெறுதல்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிரார்.
எமர்ஜிங் மார்கெட்ஸ் போரம் (Emerging Markets Forum) சந்தைகள் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்க உயர் மட்ட அரசாங்க பிரமுகர்கள் மற்றும் நிறுவன தலைவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது, இது ஒரு இலாப நோக்கற்ற முயற்சி ஆகும். திரு மோடி அவர்களை தவிர உலகம் முழுவதும் இருந்து பல தலைவர்கள் இந்த உலகளாவிய கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர் . இதில் பொலிவியா முன்னால் அதிபர் திரு கார்லோஸ் மேசா , ஜெர்மனியின் முன்னாள் ஜனாதிபதி திரு ஹோர்ஸ்ட் கொஹ்லெர் மற்றும் கென்யா முன்னால் பிரதமர் திரு ரைல் ஒடிங்கா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
நன்றி தமிழில் தாமரை கண்ணன்
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.