நரேந்திரமோடிக்கு அனுமதி மறுக்க பட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியர்கள் கண்டன ஊர்வலம்”

May-23-13

அமெரிக்க பல்கலை கழகத்தில் உரையாற்ற, நரேந்திரமோடிக்கு அனுமதி மறுக்க பட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் வசித்து வரும் இந்தியர்கள், கண்டன ஊர்வலம் நடத்தியுள்ளனர்
. அமெரிக்காவின், பென்சில் வேனியா பல்கலை கழகம் சார்பில், “வார்ட்டன் இந்தியா எகனாமிக்போரம்’ என்ற அமைப்பு ஏற்பாடுசெய்திருந்த சந்திப்பில், குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, “வீடியோ கான்பரன் சிங்’ மூலமாக உரையாற்ற இருந்தார்.

இருப்பினும் , அப்பல்கலை கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களில் சிலர், அவர் உரை நிகழ்த்துவதற்கு , எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து , மோடியின் உரை ரத்து செய்யப் பட்டது.

நரேந்திர மோடியின் உரை ரத்துசெய்யப்பட்டதற்கு எதிர்ப்புதெரிவித்து, பென்சில்வேனியாவில், நூற்றுக்கும் அதிகமான, அமெரிக்காவாழ் இந்தியர்கள், கண்டன ஊர்வலம் நடத்தினர்.

நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரிலிருந்து வந்திருந்த அவர்கள், மோடியின் உருவம் அச்சிடப்பட்ட, “போஸ்டர்’களை ஏந்திய படி, ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

“புகழ்பெற்ற பென்சில்வேனியா பல்கலைக் கழகம், 3 பேராசிரியர்கள் எதிர்த்தார்கள் என்பதற்காக, மோடியின் உரையை ரத்துசெய்தது, எங்களுக்கு வருத்தத்தையும், கோபத்தையும் உருவாக்கியுள்ளது . இதன்மூலம் பேச்சுரிமையை நசுக்கும்செயலில், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் ஈடுபட்டிருக்கிறது ‘ என, பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service