நமோ என்ற மந்திரம்”

September-25-13

இளைஞன், கட்சியின் தலைமை ஏற்கவேண்டும் என்று தொண்டர்களும், தோழர்களும் விரும்புவர். அண்ணா துரையின் மறைவிற்கு பின், நெடுஞ்செழியன் தலைமை ஏற்று இருந்தால், எம்ஜிஆர்., தி.மு.க.,விலிருந்து வெளியேறாமல், தலைமை ஏற்று இருந்தால், வைகோ திமுக.,வின் தலைமை ஏற்று இருந்தால், சில வரலாற்றுப்பிழைகள் நடந்திருக்காது.
கடந்த, 1938ல், அகில இந்திய காங்கிரஸ்கட்சி தலைவராக தேர்வுசெய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ், மீண்டும், 1939ல், தலைவர்பதவிக்கு போட்டியிட்டார். காந்திஜிக்கு, இது பிடிக்கவில்லை. எனவே, சுபாஷ் சந்திர போஸை எதிர்த்து போட்டியிட்ட, பட்டாபி சீதாராமை, காந்திஜி ஆதரித்தார். முடிவில், சுபாஷ் சந்திர போஸ் வெற்றிபெற்றார். “பட்டாபி சீதாராமின் தோல்வி, என் தோல்வி’ என பேசினார் காந்திஜி.

காங்கிரஸ் உறுப்பினர்கள், தனக்கு போதிய ஆதரவு தராதநிலையில், பல எதிர்ப்புக்களுக்கிடையே காங்கிரஸ் தலைவர் பதவியை தொடரமறுத்த சுபாஷ் சந்திரபோஸ், தன் தலைவர்பதவியை ராஜினாமா செய்தார். சுபாஷ்சந்திர போஸ், 1939ல், தன் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால், காந்திஜியின் ஆதரவு, சுபாஷ்சந்திர போஸ்க்கு இருந்து இருக்கும் என்றால், இந்திய சுதந்திரபோராட்டத்தின் பாதை, வேறு மாதிரியாகதான் இருந்து இருக்கும்.

கடந்த, 1984ல், லோக்சபாதேர்தலில், இரண்டு இடங்கள் மட்டுமே பெற்ற பாஜக.,வை, பின், ஆட்சியில் அமரவைத்த பெருமை, அத்வானியையே சாரும்.மக்களுக்கு தலைவர் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். பாஜக.,வின் மூத்த தலைவர்கள் மட்டுமல்ல, மாநில தலைவர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி, சாதாரணமக்கள் கூட, நரேந்திரமோடி பிரதமரானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர்.

கடந்த, 2002 பிப்., 27ல், கோத்ராரயில் எரிப்பில், 57 பேர் பலியானதை தொடர்ந்து, குஜராத்தில் நடைபெற்றகலவரம், மோடிக்கு கறை ஏற்படுத்தி விட்டது. ஆனால், 1969 மற்றும் 1985ல், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2002 கலவரத்தில் கொல்லப்பட்டவர்களைவிட அதிகம்.

கடந்த, 1984ல், இந்திராபடுகொலை செய்யப்பட்ட போது, சீக்கிய மக்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை, இன்னும் சரியாகதெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், 16 பேர் மீதும் காவல்துறை அதிகாரிகள், 13 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. யார்மீதும், பெரியநடவடிக்கை எடுக்கப்படவில்லை. “பலம் வாய்ந்தமரம் சாயும்போது, மண்ணையும் சிறிதுபெயர்த்து எடுத்துவிடும்’ என்று ராஜிவ் கூறியதை, யாரும் பெரிதுப்படுத்தவில்லை.

ஆனால், குஜராத்கலவரத்தில், 790 முஸ்லிம்கள், 254 இந்துக்கள் கொல்லப்பட்டனர் என்பதை, மத்திய உள்துறை இணையமைச்சர் ஜெய்ஸ்வால் லோக்சபாவில் தெரிவித்தார். குஜராத்தில் கலவரத்தை ஒட்டி நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியான, 126 பேரில், 77 பேர் இந்துக்கள் என்பதை, தேசியசிறுபான்மை மனித உரிமை தலைவர், ஜான்ஜோசப் தெரிவித்தார்.

மார்ச் 5, 2002 வரை, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 98 நிவாரணமுகாம்கள் அமைக்கப்பட்டன. 85 முகாம்களில், முஸ்லிம்கள் தங்க வைக்கப்பட்டனர். 13 முகாம்களில், இந்துக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

தற்போது குஜராத், கலவரம் இல்லாத மாநிலமாக உள்ளது.குஜராத் கலவரத்தை தொடர்ந்து, நரேந்திரமோடிக்கு, “விசா’ வழங்க, அமெரிக்கா மறுத்துவிட்டது. ஆனால், இஸ்ரேலுக்காக, எண்ணெய் வளத்திற்காக, பல முஸ்லிம்நாடுகள் மீது, அறிவிக்கப்படாத போரை துவங்கியுள்ளது அமெரிக்கா.

லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் என்று, பல நாடுகள் மீது கொத்து குண்டுகளை வீசி கொலை செய்கிறது. பிலிப்பைன்ஸ், மியான்மர் இனப் படுகொலைகள், அமெரிக்காவின் கண்ணுக்கு தெரியவில்லை.

சிரியாவில் கலகக்காரர்களுக்கு உதவ, தன்னை தயார்செய்து வருகிறது அமெரிக்கா. பலநாடுகளில் மூக்கை நுழைத்து, முஸ்லிம்மக்களை அதிகம் கொல்வது அமெரிக்கா தான்.

அதை சொல்ல, துணிச்சல் யாருக்கும் இல்லை.

முள்ளி வாய்காலில் மூன்று லட்சம் தமிழர்கள், முள்வேலிமுகாமில் இருந்து முனகிய சத்தம்கூட, அமெரிக்காவின் காதில் விழவில்லை. ஒரேநாளில், 40 ஆயிரம்பேரை கொன்ற, ராஜபக்ஷேவிற்கு, விசா மறுக்கப்படவில்லை.

கடந்த, 1960ல் உருவாக்கப்பட்ட குஜராத்தில், இதுவரை, 14 முதல்வர்கள் பதவி ஏற்று உள்ளனர். மோடிமட்டும், நான்காவது முறையாக முதல்வராக பதவிஏற்றுள்ளார். மூன்று முறை தன் தலைமையில் தேர்தலை சந்தித்துள்ளார்.

சிறுபான்மை மக்களை திருப்திபடுத்துவதே மதசார்பின்மை என்று, எல்லா அரசியல்வாதிகளும் செயல்படும்போது, மக்களின் நலத்திட்டத்தில் மட்டுமே, மோடி கவனம் செலுத்தியுள்ளார்.

தற்போது, சரியான தலைமை, பாஜக.,வுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் தேவை. சோனியாவின் வழிகாட்டுதலில், மன்மோகன் தலைமையில், காங்., கட்சியின் ஊழலால், ஊழல் பட்டியலில், உலகில் முதலிடம் இந்தியா வந்துவிடும்.

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், “2ஜி’ ஊழல், காமன்வெல்த் ஊழல், விளையாட்டு ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், இந்த ஊழலை மறைக்க, கோப்புகளை காணாமல் போகசெய்த ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், மருமகனின் ஊழல், எம்.பி., சீட் தர ஊழல் என, பட்டியல் தொடர்கிறது.

ராகுலை, காங்., கட்சியின் பிரதமர்வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றால், தேர்தலில் போட்டியிடும் காங்., உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், எத்தனைகோடி தருவர் என, காங்., தலைமை பேரம்பேசினாலும் பேசலாம். அவ்வாறு அறிவித்தால், ஊழல் அட்சய பாத்திரத்தை சுமந்துநிற்கும் மணிமேகலையின் மகனுக்கு, செங்கம்பள விரிப்பு தர, பல மாநில கட்சிகள் தற்போது தயாராகி வருவது, ஊழலின் உச்சகட்ட சாட்சியாகி உள்ளது.

“நான், 2001, அக்., 7ல், சி.ம்., ஆகவில்லை. நான் எப்போதும் சி.எம்.தான். சி.எம்., என்றால், “சீப்மினிஸ்டர்’ அல்ல; காமன்மேன்’ என்று பேட்டி ஒன்றில் கூறினார் மோடி. தற்போது, சி.எம்.,மிலிருந்து, பி.எம்.,க்கு பயணித்துவிட்டார். அதாவது, காமன்மேனிலிருந்து, “பர்பெக்ட் மேன்!’

எல்லாதேர்தலிலும், யாருக்கு ஓட்டளிக்கவேண்டும் என்று முடிவு செய்யாத, எந்த கட்சியையும் சாராதமக்கள் இருப்பர். தேர்தல் சமயத்தில், எந்த கட்சிக்கு ஓட்டளிப்பது என, நிர்ணயம்செய்யும் மக்கள்தான், வெற்றியை நிர்ணயம் செய்கின்றனர்.

மாற்றத்தை தான், எக்கட்சியையும் சாராத மக்கள்விரும்புவர். அவர்கள் ஓட்டு யார்பக்கம் என்பது, தேர்தல் வந்தால் தெரிந்துவிடும்.

அவர்கள் நமோ ஜியை தான் நிச்சயம் விரும்புவார்கள்.
ஜெய் நமோ!!!

நன்றி ; எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி வழக்கறிஞர்


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service