நகர மயமாக்கல் தீவிரமாக நடக்கிற போது பழைய மனப்பாங்கால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது”

October-17-13

குஜராத் தலைநகர் காந்தி நகரில் நகர மயமாக்கல் குறித்த தேசிய கருத்தரங்கு நடந்தது. இதில் 26 மாநிலங்களைசேர்ந்த மேயர்கள், துணைமேயர்கள் என 411 பேர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தை தொடங்கிவைத்து பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திரமோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராமத்தினர் நகரங்களைநோக்கி நகர்ந்து வருகின்றனர் என்பது குறித்து கவலை தெரிவித்து வருகிறோம். ஆனால், இன்றைய கால மாற்றத்தை பார்க்கிறபோது, இதை ஒரு சவாலாக நாம் பார்க்கக் கூடாது. ஒருவலிமையாக ஏன் இதை எடுத்துக்கொள்ளக் கூடாது?

நாம் இதை ஒருசந்தர்ப்பமாக ஒரு முறை பார்த்தால், எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். நல்லமுடிவுகளே ஏற்படும். நகர மயமாக்கல் தீவிரமாக நடக்கிறபோது பழைய மனப்பாங்கால் எந்த மாற்றத்தையும் உடனடியாக கொண்டுவரமுடியாது.

National Summit on Inclusive Urban Development commences at Mahatma Mandir

நமது நகரங்களை மாற்ற நவீனதொழில்நுட்பம், திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற நடவடிக்கைகளில் நமது அணுகு முறையை உத்வேகப்படுத்த வேண்டும். 2022-ம் ஆண்டு நாம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிற போது நமது நகரங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து நாம் கனவுகாண வேண்டும். அதற்காக திட்டமிடவேண்டும்.

National Summit on Inclusive Urban Development commences at Mahatma Mandir

நமது நகரங்களை சுத்தமாக வைத்திருக்கவில்லை என்று உலகநாடுகள் விமர்ச்சிக்கின்றன. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தினை நினைவில் நிறுத்தி நமது நகரங்களை சுத்தம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும்.

ஜவகர்லால்நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல்திட்டம் குறித்து கவனம்செலுத்த பிரதமரிடம் வலியுறுத்தினேன். அப்போது அதைபாராட்டினார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. குஜராத்தில் இந்த திட்டத்தின் சோதனைமுயற்சி சிறப்பாக அமைந்தது. ஆனால் மத்திய அரசு அதனை கண்டு கொள்ளவில்லைஎன்று  அவர் பேசினார்.

National Summit on Inclusive Urban Development commences at Mahatma Mandir

National Summit on Inclusive Urban Development commences at Mahatma Mandir

National Summit on Inclusive Urban Development commences at Mahatma Mandir

National Summit on Inclusive Urban Development commences at Mahatma Mandir

National Summit on Inclusive Urban Development commences at Mahatma Mandir

 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service