இந்திய-பிரான்ஸ் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேயும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் இரு நாடுகளை சேர்ந்த 25 தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி பேசும்போது, பிரான்ஸ் நாட்டின் உற்பத்தித் திறனையும், இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி ராணுவ தளவாடங்கள் தரத்தை மேம்படுத்துவதுடன், அவற்றுக்கு ஆகிற செலவினத்தையும் குறைக்க வேண்டும்
தொழில் செய்வதற்கு ஏற்ற நாடாக இந்தியாவை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான நேரம். எனவே இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
நீண்ட காலமாக நடைமுறையில் இருந்துவந்த பின் தேதியிட்ட வரிவிதிப்பு முறைக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மறுபடியும் நாட்டில் அறிமுகம் ஆகாது. இந்த அரசு மட்டுமன்றி வேறு எந்த அரசு அமைந்தாலும், நாட்டில் 5, 10, 15 ஆண்டுகளில் எந்த மாதிரியான வரி விதிப்பு என்பதை அன்னிய முதலீட்டாளர்கள் அறிந்து கொள்ளும் அளவில் வரி விதிப்பு முறைகள் தெளிவாக இருக்கும். அன்னிய முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. இந்தியாவின் மனித வளத்தை நீங்கள் பயன்படுத்தி பலனடைய வேண்டும். ராணுவ தளவாடங்கள் உற்பத்தித் துறையில் அடியெடுத்து வைக்க திட்டமிட்டுள்ளோம். ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் பிரான்ஸ் நிறுவனங்களை மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்குபெற வரவேற்கிறோம்.
ஒட்டு மொத்த உலக சமுதாயத்தினருக்கும், நம்பிக்கையின் பிறப்பிடமாக இந்தியா விளங்குகிறது. உலகளவில் இந்திய பொருளாதாரம் மிகவும் வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது. எங்களிடம் திறமையான தொழிலாளர்கள் உள்ளனர். உங்களது தயாரிப்புகள் இந்திய சந்தையில் பெரிதும் வரவேற்கப்படும். வாழ்க்கைத் தரம் உயரவேண்டும், நிலையான ஆளுமை அமைய வேண்டும் என்ற இரண்டு நோக்கத்துடன் இந்த அரசு முனைப்பாக செயலாற்றி வருகிறது. இதன் பலனாக, நாட்டில் அன்னிய நேரடி முதலீடுகள் 40% அதிகரித்து உள்ளது. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற மிகக் குறுகிய காலத்தில், எளிமையான வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொண்டதால், தர பட்டியலில் 12 புள்ளிகள் அதிகம் கிடைத்துள்ளது. வர்த்தகத்திற்கு சாதகமான இடம் இந்தியா என உலக நாடுகள் அறிந்து கொண்டுள்ளன.புவி வெப்பமடைவது எப்படி உலகை அச்சுறுத்தி வருகிறதோ அதுபோல், மனித சமுதாயத்திற்கு அச்சுறுத்தல் விடுத்துவரும் தீவிரவாதத்தை உலகளாவிய கூட்டு பங்களிப்புடன் இந்தியாவும், பிரான்சும் இணைந்து எதிர்க்கும்.இவ்வாறு மோடி பேசினார்
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.