தொழில்துறை மேம்பாடு ( தொழிற்சாலைகளின் சொர்க்கம்)”

February-6-14

உங்களுக்கு நிலவை பிடித்து தருகிறேன் என்று எங்களால் வாக்குறுதி தர முடியாது. ஆனால் உங்களால் வெற்றியின் உயரத்தை அடைவதற்கான பாதையை உருவாக்கித் தருகிறேன் என்று உறுதி அளிக்க முடியும்” – நரேந்திர மோடி

இந்திய தொழில்துறையை மிகச் சிறப்பானதொரு இடத்துக்குக் கொண்டு செல்வதற்காக நரேந்திர மோடி புதிய அடித்தளங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஏழையோ பணக்காரரோ இளந்த் தொழில்முனைவோரோ இந்த மாநிலத்தில் வாழ்க்கை நடத்த, பணி செய்ய, தொழில் செய்வ்தற்காக சூழல், நிர்வாக அமைப்பு. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நரேந்திர மோடி உருவாக்கி வைத்திருக்கிறார். ஒட்டுமொத்த இந்த உலகமே பொருளாதார தேக்க நிலையை எதிர்கொண்ட போது நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டம் மற்றும் சிறப்பான நிர்வாகத்தால் குஜராத் மாநிலம் மட்டுமே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியது. கடந்த 5 ஆண்டுகாலமாக குஜராத் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியானது 10%க்கும் அதிகமாக இருந்து வருகிறது. இது மற்ற இந்திய மாநிலங்களைவிட மிக அதிகமான பொருளாதார வளர்ச்சியாகும்.

மிக விரைவாக நிகழ்ந்து வரும் உலகமயமாக்கலை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது குஜராத். குஜராத் மாநிலத்தின் 2009ஆம் ஆண்டு தொழில் கொள்கையானது வலுவான, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தது. இந்தியாவிலேயே முதலீட்டாளர்களின் நாடி வரும் மாநிலமாக முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கின்ற மாநிலமாக குஜராத் திகழ்வதற்கு காரணம் நரேந்திர மோடியின் கொள்கைகளே காரணம். நாட்டிலேயே கடந்த 6 ஆண்டுகளில் மிகக் குறைவான குற்றச் செயல்கள் நிகழ்ந்திருக்கும் மாநிலமாக திகழ்கிறது குஜராத். பயங்கரவாதிகள், மாஃபியாக்கள், தாதாக்கள் போன்ற எவருக்கும் இந்த மாநிலத்தில் இடமில்லை. இவர்களால் எந்த ஒரு அச்சுறுத்தலும் குஜராத்துக்கும் கிடையாது.

குஜராத் மாநிலமானது இந்தியாவின் முன்னணி தொழில்துறை மாநிலமாக வளர்ந்துள்ளது. சர்வதேச தரத்திலான கட்டமைப்புகள், சரியான வியூகங்கள் வகுக்கப்பட்டதால் இது சாத்தியமானது. ’எழுச்சிமிகு குஜராத்’ எனும் தொழில்துறை மாநாடுகளே குஜராத்தின் தொழில்துறையில் எழுச்சியை உருவாக்கியது. இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சிக்கும் இதுவே காரணமாயிற்று. எழுச்சிமிகு குஜராத் 2011 மாநாடு மூலம் ரூ20,83,000 கோடிக்கான (450 பில்லியன் டாலர்) 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தொழில்துறை, தொழில்நுட்பத் துறை, கல்வித் துறை, சமூக நலத்துறை என அனைத்து துறைகளிலும் தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் ஈர்க்கபட்டனர். பொதுமக்கள் தனியார் பங்களிப்பு எனும் கொள்கை இதில் மிக முதன்மை பங்காற்றியது.

பெட்ரோகெமிக்கல் மாநிலமாக திகழும் குஜராத்தான் மருந்துகள் தயாரிப்பு தொழிலிலும் முன்னணியில் திகழ்கிறது. அதுமட்டுமின்றி ஆட்டோமொபைல் துறையிலும் முன்னணி மாநிலம் குஜராத்தான். உலகின் சோலார் தலைநகரம் என்று புகழப்படும் வகையில் குஜராத் மாநிலம் சோலார் மின் உற்பத்தியில் முதன்மை இடத்தில் இருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்களானது உற்பத்தியையும் ஏற்றுமதியையும் வேலைவாய்ப்பையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

தொழிற்பேட்டைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இன்னமும் சிறப்பு முதலீட்டு பிரதேசங்கள் போன்றவை விரிவடைந்து கொண்டே செல்கின்றன. இவை அனைத்துமே பொருளாதார வளர்ச்சியில் சர்வதேச மையமாக குஜராத்தை உருமாற்றும். குஜராத்துக்குள் புதிய குஜராத் என்ற கொள்கையானது மாநிலத்தின் தொழில்துறை மேம்பாட்டை வலுப்படுத்தும்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service