தேநீரும், தொழில் நுட்பமும் இந்தவாய்ப்பை வழங்கியுள்ளது”

February-13-14

மத்திய காங்கிரஸ் அரசின்மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள தேநீர் கடையில் அமர்ந்தவாறு நாட்டின் 32 நகரங்களில் 1000 தேநீர்க்கடைகளில் டி.டி.ஹெச் தொழில்நுட்பம் மூலம் நரேந்திரமோடி கலந்துரையாடினார்.

தேநீர் அருந்திகொண்டே விவாதிக்கலாம் எனக்கூறிய அவர், தேநீரும், தொழில் நுட்பமும் இந்தவாய்ப்பை வழங்கியுள்ளதாக நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்தார். மோசமான நிர்வாகத்துக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக இருப்பதாகவும் , இதுகுறித்து சாதாரண மக்கள் தொடர்ந்து விவாதிப்பதாகவும் அவர் கூறினார்.cpc-gujaratcm-120214-in1

மத்திய அரசின்மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் , ஒவ்வொருவரும் அரசியல் அறிவுபெற வேண்டும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் வெளிநாட்டுவங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்பதற்கு முன்னுரிமை தரப்பட்டும் . இந்தப்பணம் ஏழைகளுக்கு சொந்தமானது. ஆகையால், இந்த தேசவிரோதசெயலை தொடர்வதற்கு அனுமதிக்கமாட்டேன்.

cpc-gujaratcm-120214-in5

கருப்புப் பணத்தை கொண்டுவருவதற்காக சிறப்பு அதிரடிப்படை அமைத்து அதற்கு ஏற்ப சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதை செய்வதற்கு அரசியல் ரீதியாக தைரியம்தேவை. அதை பா.ஜ.க.,வால் மட்டுமே செய்யமுடியும். மீட்கப்படும் கருப்புப்பணத்தின் மூலம் முறையாக வரி செலுத்திவரும் மாதாந்திர ஊதியதாரர்களுக்கு 5 முதல் 10 சதவீதம் தொகை வரிச்சலுகையாக பகிர்ந்து அளிக்கப்படும்’ என்றார் மோடி.

cpc-gujaratcm-120214-in4

அவரது பேச்சிலிருந்து மேலும் சில….

தேநீருக்கு நன்றி சாதாராண மக்கள் நினைப்பதைப் புரிந்து கொள்ள, அறிந்து கொள்ள டீக்கடைகள்தான் சரியான வழி. இது எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு.

மக்களை எளிதில் அணுகக் கூடிய வாய்ப்பு இது. இதற்காக தேநீருக்கு நன்றி சொல்கிறேன். பழைய நினைவுகள் வருகின்றன எனக்குள் பழைய நினைவுகள் வருகின்றன. நான் டீ விற்றபோது சந்தித்த அனுபவங்கள் நினைக்கு வருகின்றன. மக்களை சந்தித்து நான் அறிந்து கொண்டது ஏராளம். எத்தனை அனுபவங்கள்.. அவமானங்கள் நான் டீ விற்ற நாட்களில் நான் சந்தித்த அனுபவங்களும் அதிகம், அவமானங்களும் அதிகம்.

cpc-gujaratcm-120214-in2

cpc-gujaratcm-120214-in3

cpc-gujaratcm-120214-in6

இதுதான் உண்மையான நாடாளுமன்றம் உண்மையில் டீக்கடைகள்தான் நாட்டின் நாடாளுமன்றம் ஆகும். இங்குதான் மக்களை நாம் அறிய முடியும், மக்கள் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ள முடியும். உண்மையான நல்லாட்சி எது உண்மையான நல்லாட்சி எது என்பது யாருக்கும் தெரியவில்லை. அந்த வார்த்தையை மட்டும் சொல்கிறார்கள். ஆனால் அதன் முழுப் பயனையும் நாம் யாரும் இதுவரை உணரவில்லை.

சர்க்கரை நோய் போல மோசமான ஆட்சி என்று சொல்வதை சர்க்கரை நோய்க்கு ஒப்புமைப்படுத்தலாம். சர்க்கரை நோய் வந்தால் எப்படி ஆகுமோ, அப்படித்தான் மோசமான ஆட்சியும். ஊழல், வளர்ச்சியின்மை ஆகியவற்றை அது கொண்டு வந்து விடும்.

மத்திய அரசு மீது சாதாரண மக்கள் புகார்களைக் கூறுகிறார்கள், குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு அரசு மீதான நம்பிக்கை போய் விட்டது. அதை நாம் நிலை நிறுத்தியாக வேண்டும். 2 கோடி பேருடன் பேசப் போகிறேன் தொழில்நுட்பம் மூலம் இன்று நாடு முழுவதும் மக்களுடன் நான் டீ சாப்பிட்டபடி உரையாட முடிந்திருக்கிறது. இனிமேல் இதேபோல வீடியோ கான்பரன்சிங் மூலம் 2 கோடிப் பேருடன் பேசப் போகிறேன் என்றார் மோடி.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service