தேசத்துக்காக விழிப்படையுங்கள் இந்தியர்களே”

October-7-13

கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற ” இந்தியா என்கிற அடையாளத்துக்கான தொலைநோக்கம்’  (Vision For Brand India) என்கிற தலைப்பிலான  கருத்தரங்கில் திரு.மோடி அவர்கள் பங்கு பெற்று சிறப்புரை ஆற்றினார். அவரது உரை குறித்த கருத்துக்களை திரு. சுதர்சன் ராமபத்ரன்  நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் திரு.மோடி அவர்கள் ஆற்றிய பல உரைகளைக் கேட்டிருக்கிறேன். ஆனால் சமீபத்தில் மும்பையில் நடந்த ‘இந்தியா  என்கிற அடையாளத்துக்கான தொலைநோக்கம்’  (Vision For Brand India) என்கிற தலைப்பிலான  கருத்தரங்கில்  ஆற்றிய அவரது உரை மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், எழுச்சி ஊட்டுவதாகவும் அமைந்தது. அதில் அவர் குறிப்பிட்ட  ‘தேசத்துக்காக  விழிப்படையுங்கள் இந்தியர்களே ‘ (Awaken Indians To India) என்கிற அவரது உணர்ச்சி பூர்வமான அவரது அழைப்பு மிகவும் எழுச்சி ஊட்டுவதாக அமைந்தது.

அதோடு உலகுக்கான இந்தியாவின் பங்களிப்பு மற்றும் நாம் எதற்காக உலக நாடுகளால் அறியபடுகிறோம், நமது தேசத்தின் பலம் என்ன  என்பதை ஒவ்வொரு இந்தியரும், இந்திய இளைஞரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும், இது நமது கடமை என்பதை அழகாகவும் நேர்த்தியாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்தியர்களாகிய நாம் எந்தவொரு விடயத்தையும் ஆழமாக அறிந்து கொள்வதை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை திரு.மோடி அவர்கள் முன் வைத்ததோடு நாம் ஏன் இந்தியாவுக்கென தனிப்பட்டதொரு அடையாளத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.

நம் தேசத்தின் மீது நம்பிக்கை இல்லாததே இதற்கு காரணம் என்றும், அந்த நம்பிக்கையின்மையானது நமது தேசத்தின் வரலாறு, புகழ் மற்றும் பாரம்பரியம் பற்றி அறிந்திராததும் , உலகுக்கான நம் தேசத்தின் பங்களிப்பு பற்றி நமக்கு தெரிந்திராததும்  தான்  முக்கிய காரணம் என்று எடுத்துரைத்தார்.

இவ்வாறு திரு.மோடி அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்துக்கூறிய  போது நம் நெற்றிப் பொட்டில்  அடித்தார் போன்று இருந்தது. நம்  தேசத்தின் புகழை ஒவ்வொரு இந்தியனும் குறிப்பாக ஒவ்வொரு இளைஞனும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது கடமையென நான் உணர்ந்தேன்.

நம் பாரத தேசத்தை அடையாளப்படுத்துவதற்கான முக்கியத்தை அவர் எடுத்துரைத்த போது திரு.மோடி அவர்கள் எந்த அளவிற்கு நம் இன்றைய கால இளைஞர்களின் மன ஓட்டத்தை அறிந்து வைத்திருக்கிறார் என்பதை உணர முடிந்தது. நமது தேசத்தின் பண்டைய கால வரலாறை, புகழை  ஒரு மாறுபட்ட கோணத்தில் எடுத்துக் கூறி  நமது இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தால், நமது தேசம் பற்றிய எண்ணத்தில் இளைஞர்களுக்கு மாற்றம் ஏற்பட்டு அவர்களை பெருமை கொள்ள செய்யும்.

இந்தப் பெருமையானது இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுப்பதோடு தேசத்திற்கான அவரகளது பங்களிப்பை அதிகப்படுத்த அது துணைபுரியும்.

பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிற போதோ அல்லது பொது கலந்துரையாடலின் போதோ  திரு.மோடி அவர்களின் கருத்துக்களை  உற்றுநோக்குவோமாயின் அவரது அருமையான ஆத்மார்த்தமான ஆன்மீகச் சிந்தனை  வெளிப்படும்.  இளம்பிராயத்திலேயே சுவாமி விவேகானந்தர் மற்றும் அவரது  போதனைகள் மீதான  அவரது ஈடுபாடு, இந்தியக் கலாச்சாரத்தின் மீதான  பற்று  ஆகியவற்றை நன்கு உணர முடியும். மேற்கத்திய இசையை விட இந்துஸ்தானி இசையின் மீதான அவரது ஆர்வம் மற்றும் ஈடுபாடு அதற்காக அவர் சொல்லும் காரணம் எந்த அளவிற்கு நமது பண்பாடு கலாச்சாரத்தில் அவரது எண்ணம் வேரூன்றி இருக்கிறது என்பது நன்கு புலப்படும். ‘ இந்துஸ்தானி இசையானது மனதை உருக்கும், மயக்கும் வல்லமை கொண்டது மாறாக மேற்கத்திய இசையானது வெற்றுடலுக்கு மட்டுமே இனிமை தரும்’ என்றார்.

பல தலைவர்கள் உலக விடயங்களை நன்கு வாசிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள் ஆனால்  வெகு சிலரே ஆழமாக அதை  வாசித்து   உணர்வார்கள்.

 

திரு.மோடி அவர்கள் நன்கு வாசிக்கும் பழக்கம் உடையவர் மட்டும் அல்ல ஆழமாக அதை உணரும் தன்மை கொண்டவரும் கூட. காந்திஜி அவர்கள் எத்தகைய  தொடர்பை மக்களிடம் வைத்திருந்தார் சுதந்திரப் போராட்டத்தின் போது  அவரது கருத்துக்கள்   எந்த அளவுவுக்கு  ஆழமாக மக்களை சென்றடைந்ததை அவர் எடுத்து கூறியது சிறப்பிலும் சிறப்பு.

இந்தியக் பண்பாடு கலாச்சாரத்தின் மீதான ஈடுபாடு கொண்ட மோடி போன்றவர்களால் மட்டுமே இத்தகு விடயங்களை உணர முடியும் என்று சொன்னால் அது மிகை அன்று.

திரு.மோடி அவர்களின் அன்றைய  பேச்சை ஒரு ஹிந்தி  தொலைக்காட்சியில் தலை முதல் கால் வரை பிரித்து   விவாதித்து கலந்துரையாடியதை நான் பார்க்க நேர்ந்தது.  அந்த விவாதத்தின் இறுதியில் அதில் பங்கு பெற்ற அனைவரும் நமது தேசத்தை வழி நடத்த திரு.மோடி அவர்களைத் தவிர சிறந்தவர் யாரும் இல்லை என்று முடித்தார்கள். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா என்ன!

நமது பாரத தேசத்தை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல, ஒரு மாறுபட்ட தேசத்தை நாம காண ஒரு அரிய  வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  அந்த கனவு நிறைவேறுமா!

நன்றி தமிழில் ; தர்மராஜ் மணிகண்டன் 


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service