தெலுங்கானா காங்கிரஸ் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை”

July-31-13

தெலுங்கானா தனிமாநில கோரிக்கையை கடந்த 9 ஆண்டு காலமாக எதுவும்செய்யாமல் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டணி அரசு நிறைவேற்றி யிருப்பது சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார் .
மோடி தமது இணைய தளத்தில் அனைத்து ஆந்திராபகுதி மக்களுக்கும் பகிரங்க கடிதம் ஒன்றை பதிவுசெய்திருக்கிறார். அதில், ஹைதராபாத்தில் ஆகஸ்ட் 11ந் தேதி உங்களை சந்திக்க உள்ளேன் . அந்தக்கூட்டத்தில் தெலுங்கானா தனிமாநிலம் குறித்தும் பிற ஆந்திர பகுதி மக்களின் கவலைகுறித்தும் எனது கருத்துகளை பகிர்ந்துகொள்கிறேன்.

கடந்த 9 ஆண்டுகாலம் எதையுமே காங்கிரஸ்கட்சி செய்யாமல் கடந்த சிலநாட்களில் தெலுங்கானா தொடர்பாக முடிவெடுத்துள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லை. தெலுங்கானா விவகாரத்தில் உரியநேரத்தில் எதையும் செய்யாமல் காங்கிரஸ் கட்சியும் அதன் அரசும் அந்தமக்களுக்கு துரோகம் செய்துவிட்டது.

ஆனால் தெலுங்கானா தனிமாநிலம் அமைக்கவேண்டும் என்பதில் பாஜக உறுதியாக, வெளிப்படையாகவே செயல்பட்டது. இந்தநாட்டிலேயே பாஜக மட்டுமே சிறியமாநிலங்களை உருவாக்கியுள்ளது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் சத்தீஸ்கர், உத்தர்காண்ட், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தலில்வென்ற காங்கிரஸ், தெலுங்கானா தனிமாநிலம் அமைப்போம் என்று உறுதி கொடுத்தது. ஆனால் 9 ஆண்டுகாலம் எதையுமே செய்யவில்லையே.. நான் காங்கிரஸ் கட்சியிடம் சிலகேள்விகளை கேட்க விரும்புகிறேன். –

தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியில் ஏன் ஒருமித்தகருத்து எழவில்லை? இதற்காக முன் கூட்டிய திட்டமிடல் எதையும் மேற்கொண்டீர்களா? – தெலுங்கானாவுக்குள் ஹைதராபாத் இருக்கின்றபோது அதை பொதுதலைநகராக அறிவுத்துள்ளீர்களே.. இது சரியல்ல. – கடலோர ஆந்திரா, ரயால சீமா மக்களும் தெலுங்கானா தனிமாநிலத்தை ஆதரிக்கும் வகையில் என்ன திட்டம் மேற்கொண்டுள்ளீர்கள்? தனி ஆந்திரமாநிலம் உருவாக பொட்டி ஸ்ரீராமுலு உயிரைத் தியாகம்செய்தார். அவரது தியாகத்தின் வழியில் தெலுங்குபேசும் அனைத்து மக்களும் முன்னேற்றத்துக்காக ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service