அக்-10’2013 வியாழன் அன்று இந்தியாவுக்கான தென் கொரிய தூதர் திரு.ஜூன் க்யு லீ குஜராத் முதல்வர் திரு.மோடியை காந்திநகரில் சந்தித்தார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும், இந்திய மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இடையிலான ராஜாங்க உறவுகள் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவு பெரும் இவ்வேளையில் நடந்த சந்திப்பு சிறப்பு பெறுகிறது. இச்சந்திப்பின் போது குஜராத் மற்றும் தென் கொரியா இடையிலான பண்பாடு, கல்வி, பொருளாதாரம் மற்றும் தொழில்துறை போன்ற பல்வேறு துறை சார்ந்த இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதே வேளையில் திரு.மோடி அவர்களை தென் கொரியாவுக்கு வருமாறு திரு.ஜூன் க்யு லீ அவர்கள் அழைப்பு விடுத்தார்.
தனது முந்தைய தென் கொரிய பயணத்தை நினைவு கூர்ந்த திரு.நரேந்திர மோடி அவர்கள் குஜராத் தென்கொரியாவுக்கு இடையே தொடரும் சுமுகமான உறவை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.
குஜராத்தின் கடல் சார் மனித வள மேம்பாட்டை தென் கொரிய கடல் சார் பல்கலைக்கழக ஒத்துழைப்புடன் பெருக்குவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்த அந்த வேளையில், இரு பிரதேசங்களுக்கு இடையேயான கடல் சார்ந்த வர்த்தகத்தை பெருக்குவதற்கான தனது ஆசையையும் தென் கொரிய தூதரிடம் வெளிப்படுத்தினார். அதோடு கப்பல் கட்டுமானத்துறையில் தென் கொரியாவுடனான ஒத்துழைப்பு குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
குஜராத், தென் கொரியா இடையிலான கலாச்சார உறவுகளை மேம்படுத்துவது மற்றும் மாணவர் பரிமாற்றம் குறித்தும் பேசிய திரு.நரேந்திர மோடி அவர்கள் குஜராத்தில் நடைபெற இருக்கும் தேசிய நகர்ப்புற வளர்ச்சி உச்சி மாநாட்டில் (National Urban Development Summit) தென் கொரியா சார்பாக கலந்த கொள்ள அழைப்பு விடுத்தார்.
இச்சந்திப்பின் போது தொழிற்துறைக்கான கூடுதல் முதன்மைச் செயலர் திரு. மகேஷ்வர் சாஹு அவர்களும் முதல்வருக்கான முதன்மைச் செயலர் ஏ .கே. சர்மா அவர்களும் உடனிருந்தனர்.
நன்றி தமிழில் ; தர்மராஜ் முரளிகிருஷ்ணன்
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.