தடையில்லா மின்சாரம்- ஜோதிகிராம்”

February-6-14

குஜராத் மாநில கிராமங்களுக்கான மின்சாரம் விநியோகப்படும் முறையானது பிறநாடுகளும் இந்தியாவின் பிற மாநிலங்களும் கற்றுக் கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பம். மற்ற மாநிலங்களைப் போல மின்விநியோகத்தில் குறைபாடு, மின்சாரம் இல்லை என்பது போன்ற பிரச்சனையே இங்கு இல்லை. இதர மாநிலங்களைப் போல குஜராத்தில் மின்வெட்டே இல்லாமல் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறது.

இது எப்படி சாத்தியமானது? முதல்வர் நரேந்திர மோடியின் மூளையில் உதித்த ஜோதிகிராம் திட்டம்தான் காரணம்! ஜோதிகிராம் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதன் மூலமாக 24 மணி நேரமும் மும்முனை மின்சாரமானது 18,742 கிராமங்களுக்கும் அதனை ஒட்டிய 9680 பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒரே ஒரு திட்டம் மூலமாக குஜராத்தின் கிராமப் புறங்களின் பொருளாதார கட்டமைப்பு, வாழ்க்கை முறையில் புரட்சிகர மாற்றத்தை கொண்டு வந்துள்ளன. கிராமங்களைவிட்டு நகரங்களுக்கு இடம்பெயருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து போயுள்ளது. இத்திட்டம் 30 மாதங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் இந்தியாவிலேயே வீடுகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், நகரங்கள், கிராமங்கள் என அனைத்தும் 100% மின்சாரத்தை பெற்ற முதல் மாநிலமானது குஜராத்.

வீடியோ இணைப்பு:

குஜராத் மாநில அரசானது விவசாயத்துக்கான மின்விநியோகத்தை வீடுகள் மற்றும் தொழில்துறைக்கான மின்கட்டமைப்பில் இருந்து தனியே பிரித்தது. விவசாயத்துக்கான மின்விநியோகப் பாதை என்பது தனியாகவே கட்டமைக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு சீரான முறையில் மின்சாரம் கிடைத்தது. முன்பெல்லாம் 13-14 மணி நேரம் சீரற்ற மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டிருந்த விவசாயிகளுக்கு தற்போது 8 மணி நேரம் சீரான மின்சாரம் கிடைப்பதற்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஜோதிகிராம் கொடுத்த நன்கொடை. இந்த ஜோதிகிராம் திட்டம் சமூக பொருளாதார, கல்வி புரட்சிக்கான வினையூக்கி.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service