“நான் நம்புவதெல்லாம் ஐடி+ஐடி=ஐடி. அதாவது இந்தியரின் அறிவு(Indian talent)+ தகவல் தொழில்நுட்பம் (Information technology) = நாளைய இந்தியா (India Tomorrow). நம்முடைய அறிவால் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் எதிர்கால இந்தியாவை கட்டமைக்க முடியும் என்பதில் நான் உறுதியாக நம்பிககி கொண்டிருக்கிறேன்”- நரேந்திர மோடி.
”மின்னணு அரசு நிர்வாகம் என்பது எளிதான நிர்வாகம், அது ஆக்கப்பூர்வமான நிர்வாகம்.. அதே நேரத்தில் மிகவும் செலவில்லாத நிர்வாகமும் கூட” – நரேந்திர மோடி.
முதல்வர் நரேந்திர மோடியின் பார்வையில், மாநிலத்தின் வளர்ச்சியில் தொழில்நுட்பம் என்பது முக்கிய பங்கு வகிக்கக் கூடியது. ஒரு அரசு நிர்வாகத்தை எளிமையாக்குவது, செலவில்லாமல் செய்வது, ஆக்கப்பூர்வமாக செயல்படுவது, மரபுகளை கடைபிடிப்பது என்பதை சாத்தியமாக்குவது.
அதிநவீன தொழில்நுட்பங்களை பெருமளவில் பயன்படுத்த வேண்டும் என்று நரேந்திர மோடியின் நம்பிக்கை. ஆசியாவிலேயே 50 ஆயிரம் கிலோ மீட்டருக்கு ஆப்டிகல் பைபர் நெட்வொர்க்கை கொண்டது குஜராத். இதனால்தான் அவரும் மற்ற அரசு நிர்வாகங்களும் எளிதாக கிராமப் புற மக்களையும் கூட வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு செயலாற்ற முடிகிறது.
பொதுமக்களின் குறைதீர்ப்புக்காக நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது ஸ்வாகத் திட்டம். இத்திட்டம் உலகிலேயே மிகவும் முன்மாதிரியான தனித்துவமான திட்டமாகும்.
இ- தாரா திட்டமானது பொதுமக்களின் நிலம் தொடர்பான ஆவணங்களை கணிணிமயமாக்கம் செய்து கொடுக்கிறது. இத்திட்டம் மூலம் மாநிலம் முழுவதும் நிலப் பதிவேடுகள் அனைத்தும் கணிணிமயமாக்கப்படும். இதன் மூலம் கைகளால் இப்பதிவேடுகளை பராமரிக்கும் முறை ஒழிக்கப்பட்டு அனைத்தும் கணிணியே கட்டுப்படுத்தும் நிலை உருவாகிறது.
வீடியோ இணைப்பு
மின்னணு எடை இயந்திரங்கள், ஓட்டுநர் உரிமங்களுக்கான ஸ்மார்ட் கார்டுகள், ஆன்லைனில் விற்பனை செலுத்துதல், நீதிமன்றங்களையும் சிறைகளையும் இணைத்தல் அனைத்துமே மின்னணு நிர்வாகத்தின் ஒரு அங்கம். குடும்ப அட்டைகளில் பார் கோடுகளை பதிவிடுதல், நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளையும் கணிணிமயமாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் மின்னணு அரசு நிர்வாகம் மூலமே தொடங்கப்பட்டுள்ளது. குடிமக்கள் சாசனமானது 100க்கும் மேற்பட்ட பொது சேவைகள், 300 ஜனசேவா கேந்திராக்கள், இ-மம்தா, தொலைதூரக் கல்வி போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது.
குஜராத் மாநில அரசானது தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது. இந்திய அரசின் தேசிய மின்னணு அரசு நிர்வாக திட்டம் மற்றும் மிஷன் மோட் ப்ராஜெக்ட் ஆகியவற்றின் அம்சங்களை உள்ளடக்கிய மாநில அரசின் இணையதளம் செயல்படுகிறது. இந்த இணைய தளம் ஒன்றின் மூலமே மாநில அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும். அரசின் பல்வேறு துறைகளைப் பற்றிய தகவல்கள், அவற்றுக்கான இணையதள இணைப்புகளையும் இத்தளம் கொண்டிருக்கிறது.
நரேந்திர மோடியின் தனிப்பட்ட இணையதளமான (www.narendramodi.in) முன்னுதாரமான தளம். உலகின் அனைத்து பகுதி மக்களையும் எளிதாக சென்றடையக் கூடிய முன்னோடி சமூக வ்லைதளமாகும். வெளிப்படையான, ஆக்கப்பூர்வமான, தகவல்களை உள்ளடக்கிய சிறந்த மின்னணு நிர்வாகத்துக்குரியதாக சிறந்த சமூக வலைதளமாக அது செயல்படுகிறது.
அவசியம் பார்க்க வேண்டிய இணைப்புகள்
இ-இந்தியா மாநாட்டில் நரேந்திர மோடி ஆற்றிய உரை:
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.