2 அக்டோபர் 2013 புதன் அன்று மதியம் ஸ்ரீ நரேந்திர மோடி ‘மந்தன்’ நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் கலந்து கொள்ள தில்லி வந்தார் . ஆரம்பத்தில் உரையாற்றிய , ஸ்ரீ மோடி அவர்கள் ,ஒரு மாணவனாக இளைஞர்கள் மத்தியில் உட்கார்ந்து அவர்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக கூறினார் . ஸ்ரீ மோடி ,இளைஞர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலும் சிறப்பாக செயல்படுவதாக கூறினார் . அவர் எல்லா வகையான மக்களும் ஜனநாயக முறையில் இந்த மந்தனில் பங்குகொண்டுள்ளதாக கூறினார் .
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் (1995-2004) ஸ்ரீ சந்திரபாபு நாயுடு மற்றும் சிறந்த வழக்கறிஞரும் எம்.பி.யுமான ஸ்ரீ ராம்ஜெத்மலானி இதில் கலந்துகொண்டனர் . அவரது உரையில் , திரு நாயுடு அவர்கள் இந்தியாவின் வளர்ச்சி விருத்தி அடைவதற்கு காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். அவர் இது நடக்கவில்லை என்றால் , எல்லோரும் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று கூறினார் . ஸ்ரீ சந்திரபாபு நாயுடு அவர்கள் ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் ஸ்ரீ எல்.கே. அத்வானியின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சிறப்பாக பணியாற்றியதாக புகழாரம் சூட்டினார். அவர் காங்கிரஸ் ஆட்சியில் சீர்திருத்தங்களின் வேகம் மிகவும் மெதுவாக உள்ளது என கூறினார். அவர் தெலுங்கு தேசம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஆந்த்ராவின் மதிப்பை உயர்த்தியதாகவும், பில் கிளிண்டன் மற்றும் திரு டோனி பிளேயர் போன்ற தலைவர்கள் தங்கள் விஷன் 2020க்கு எடுத்துக்காட்டாக அப்போதைய ஹைதராபாத் நகரை கருதியதாகவும் கூறினார், . அவர் தொலை தொடர்பு புரட்சிக்கு . , சாலைகள் மேம்பாட்டு பணி , சர்வ ஷிக்ஸா அபியான் ( அனைவருக்கும் கல்வி திட்டம் ) மற்றும் மின் சீர்திருத்த நடவடிக்கைகளில் தே.ஜ கூட்டணி அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.
இன்றைய நிலைமை பற்றி குறிப்பிடுகையில் , சாதாரண மனிதன் உயரும் விலைவாசி காரணமாக பாதிகப்பட்டுள்ளனர் என்றும் , விவசாயம் உற்சாகம் இழந்து உள்ளது , சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகமாக உள்ளது மற்றும் காங்கிரஸ் அரசின் திட்டங்கள் வெறும் கோசங்களாக மட்டுமே உள்ளதாக குற்றம் சாட்டினார். அவர் ஒரு வல்லரசாக இந்தியாவின் பயணம் தொடங்கும் ஒரு வாய்ப்பாக 2014 தேர்தலை பயன்படுத்த இளைஞர்கள் வலியுறுத்தினார் .
ஸ்ரீ நரேந்திர மோடியை பற்றி , ஸ்ரீ சந்திரபாபு நாயுடு அவர்கள் குறிப்பிடுகையில் “2004ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் குஜராத் பற்றியே அதிகம் பேசுகிறார்கள் ” , என்றார் . (அதற்கு முன் ஹைதெராபாத் இருந்தது போன்று)
ஏராளமான இளைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
புது தில்லியில் தியாகராஜ் ஸ்டேடியத்தில் குடிமக்கள் மற்றும் அக்கவுண்டபில் கவர்னன்ஸ் ( CAG ) ஏற்பாடு செய்த மந்தன் மிக பெரிய இளைஞர் இயக்கம் 2014 மக்களவை தேர்தலில் ஒரு நேர்மறையான நிகழ்ச்சியாக அமைக்க முயன்று வருகிறது. நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 7000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இக் கல்லூரிகளில் ஐஐடிக்கள் , ஐ.ஐ. எம்கள் , வணிக பள்ளிகள் , சட்ட கல்லூரிகள் மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்கள் அடங்கும் .
கல்லூரி மாணவர்கள் இன்று இந்தியா எதிர்கொள்ளும் 14 மிக முக்கியமான சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை கொண்டுவர இந்நிகழ்ச்சி உற்சாகப்படுயது. 250 நகரங்களில் 700 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 20,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர் . தீர்ப்பு இரண்டு பக்க அணுகுமுறையை பயன்படுத்தி நடந்தது . 5 லட்சம் மாணவர்கள் சிறந்த யோசனைகள் தேர்வு செய்து மந்தன் வலைத்தளத்தில் வாக்களித்தனர். ஒரே நேரத்தில் பல்வேறு துறைகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் தங்கள் உள்ளீடிகளை வழங்கினர் . ஒவ்வொரு கருத்திற்கும் சிறந்த 3 யோசனைகளை தேர்வு செய்யப்பட்டன.
ஸ்ரீ நரேந்திர மோடி பெரும்பாலான இளைஞர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மந்தன் இறுதி நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டார். ஆன்லைன் வாக்கெடுப்பில் கடந்த இரண்டு மாதங்களில் 80 % இளைஞர்கள் திரு மோடி அவர்களின் உரையை கேட்க விரும்புவதாக வாக்களித்தனர் .
நன்றி; பாலமுருகன்