டெல்லியில் பாஜக உயர்மட்ட தலைவர்களின் கூட்டம் நரேந்திர மோடி பங்கேற்பு”

August-18-13

வரும் லோக்சபா தேர்தலில் 272 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கை அடைய இளைஞர்களையும், முதன் முதலில் தங்கள் ஓட்டை பதிவு செய்ய வருபவர்களையும் கவர வேண்டும் என பா.ஜ.,வினருக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பா.ஜ.,வின் பிரசாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் தனது பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 4 மாநில சட்டசபை தேர்தல் குறித்தும், தேர்தலில் வெற்றி பெறுவது,பா.ஜ.,வின் வெற்றி வியூகம் குறித்து விவாதிக்க பா.ஜ.,வின் பார்லிமென்ட் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், பிரசாரத்தில் மோடியை ஈடுபடுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில், பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், நாட்டில் அனைத்து தரப்பு மக்களையும் கவர வேண்டும் என பா.ஜ., பிரசாரக்குழு தலைவர் நரேந்திர மோடி கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர், குஜராத்தில் 25 சதவீத இஸ்லாமியர்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்துள்ளனர். இதேபோல், மற்ற பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் பா.ஜ.,வை ஆதரிப்பார்கள். தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்றால்,பல கட்சிகள்பா.ஜ., கூட்டணியில் இணையும். தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம். அதற்கு பா.ஜ.,வினர் தயாராக வேண்டும். மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் மோடி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில், நாட்டு மக்கள் அனைவரும் காங்கிரசுக்கு எதிராக உள்ளனர்.காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக்கட்சியாக பா.ஜ., உள்ளது என மோடியும் ராஜ்நாத் சிங்கும் கூறினர்.
மேலும் இந்த கூட்டத்தில்,ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளபேரணிகளை வெற்றிகரமாக நடத்துவது, பூத் கமீட்டிகளை பலப்படுத்துவது, கிராமங்கள் மற்றும் வீடுகள்தோறும் கட்சியை கொண்டு சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

வரும் லோக்சபா தேர்தலில், 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்சியின் இலக்கை நாம் அடைய வேண்டும் என ராஜ்நாத் சிங் கூறினார். ரூபாய் வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உயர்வு போன்றவை தொடர்பாக காங்கிரசை கடுமையாக தாக்கி பேசினார்.

 

 


 


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service