டெல்லியில் ஒரு ஆட்சிக்குள் பல ஆட்சிகள் நடக்கின்றன. அம்மா ஆட்சி ஒரு பக்கம், மகன் ஆட்சி மறுபக்கம்”

September-29-13

மத்தியில் பல அதிகாரமையங்கள் உள்ளன. தாய் ( சோனியா) மகன் ( ராகுல்), மருமகன் (ராபர்ட்வதோரா ) ஆகியோர் ஆளுக்கொரு அதிகாரம்செய்து ஆட்சியை நடத்தி வருகின்றனர். இதனால் வளர்ச்சிபணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதமரை ராகுல்காந்தி நான்சென்ஸ் என்கிறார். அதற்கு எதிர்ப்புதெரிவிக்காமல் இருக்கிறார் பிரதமர். இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை அடியோடு விரட்டியாகவேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி. Read More
டெல்லியில் இன்று நடந்த விகாஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் நரேந்திரமோடி. காங்கிரஸையும், காங்கிரஸ் கூட்டணி அரசையும், டெல்லி அரசையும், பிரதமர் மன்மோகன்சிங் கையும் கடுமையாக விமர்சித்து அவர்பேசினார்.

பல வரலாறுகளை படைத்தவர்கள் டெல்லிமக்கள். இப்படி ஒருகூட்டத்தை இதற்குமுன்பு டெல்லி கண்டதில்லை. இதற்காக அனைவருக்கும் நன்றிசொல்கிறேன். இயற்கையும் நம் பக்கம் உள்ளது. டெல்லியில் இன்று பல ஆட்சிகள் நடைபெறுகின்றன. அம்மா ஒருபக்கம் ஆட்சி புரிகிறார், மகன் ஒருபக்கம் ஆட்சி நடத்துகிறார். கூட்டணி கட்சிகள் தனி ஆட்சி நடத்துகிறார்கள். ஒரு ஆட்சிக்குள் பலஆட்சிகள் இங்குதான் நடக்கிறது

டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் வெறும் ரிப்பன்களை வெட்டும்வேலையை மட்டுமே செய்கிறார். அவர் தான் இந்தியாவிலேயே மிகவும் மகிழ்ச்சியான முதல்வர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், கட்சிகள் அனைத்தும் தங்களதுகுறைகளை பிறரிடம் தள்ளி விடுவதிலேயே கவனம் செலுத்துகின்றன். கூட்டணி இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இல்லை. ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதிலேயே கவனமாக உள்ளனர். கைகோர்த்து செயல் படுவதில்லை. ஆனால் வாஜ்பாய், அத்வானிகாலத்தில் அப்படி இருந்ததில்லை. கூட்டணி ஆட்சிகள் எண்ணிக்கையின் அடிப்படையி்ல் தான் அமைகின்றன. ஆனால் கெமிஸ்ட்ரி அடிப்படையில் தான் அவை நடக்கின்றன.

Narendra Modi addresses Vikas Rally in Delhi

காமன்வெல்த் போட்டி ஊழலால் டெல்லியை சர்வதேசளவில் கெட்ட பெயருக்குள்ளாக்கி விட்டார் ஷீலாதீட்சித். பலநாடுகள் விளையாட்டு போட்டிகளை நடத்தி பிரபலமாகியுள்ளன. தென்கொரியாவை பாருங்கள், சீனாவைப்பாருங்கள். ஆனால் இந்தியாவின் பெயரைக் கெடுத்துவிட்டது டெல்லி காமன்வெல்த் போட்டி ஊழல்.

டெல்லியில் பாலியல்பலாத்காரம் நடக்கும் போதெல்லாம் நான் அதிர்ச்சி அடைகிறேன் என்று கூறுகிறார் ஷீலாதீட்சித். பின்னர் பெண்கள் வெளியில்போனால் சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பவேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். எல்லா வீட்டிலும் இதைத் தான் சொல்வார்கள். பிறகு எதற்கு தனியாக ஒருமுதல்வர்…

தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் வளர்ச்சிக்காகபாடுபட்டது. ஆனால் இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, காந்திகளுக்கு விசுவாசமாக உள்ளவர்களை மட்டுமே அங்கீகரிக்கிறது, போஷிக்கிறது. காந்திகள் மீதான விசுவாசம் மட்டுமே எடுபடுகிறது. அந்த காந்திமீது மரியாதை போய்விட்டது. இந்தகாந்திகள் மட்டுமே மதிக்கப்படுகிறார்கள். பணத்தைசுரண்டி காந்திக்கு மரியாதை செலுத்துகிறார்கள்.

எப்போது ஒருநிர்வாகத்தில் மோசமான நிர்வாகம் புகுகிறதோ, அன்றே ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்குலைந்து போய்விடும். சுயராஜ்ஜியம் அடைந்து பலவருடங்களை தாண்டியும், இந்தியா இன்னும் நல்லாட்சியை காணமுடியாத நிலை உள்ளது. நமது இளைஞர்கள் வேலை செய்யத்தயாராக உள்ளனர். ஆனால் மத்திய அரசு வேலை தரத் தவறிவிட்டது. வேலை வாய்ப்புகளை உருவாக்க தவறிவிட்டது.

உலகநாடுகள் வேகமாக முன்னேறுகின்றன. ஆனால், நாமோ வேகமாக பின்னுக்கு போய்க் கொண்டுள்ளோம். உலகநாடுகள் முன்பு நாம் நகைச்சுவை பொருளாக காட்சிதருகிறோம். ரயில்வேயில் சீனா பெரும்வளர்ச்சி கண்டுள்ளது. பல துறைகளிலும் வளர்ச்சிகண்டுள்ளது. ஆனால் நாம் பின்தங்கியுள்ளோம்.

Narendra Modi addresses Vikas Rally in Delhi

தேசிய நெடுஞ்சாலைகளை விரிவு படுத்துவதிலும் நாம் பின்தங்கியுள்ளோம். தொலைதூரத்தில் உள்ளோம். விமானத் துறையிலும் நாம் பெரும் கடனாளியாக இருக்கிறோம். பாகிஸ்தான் பிரதமரை சந்திக்கப்போகிறார் மன்மோகன்சிங். அவர்கள் என்ன பேசப்போகிறார்கள் என தெரியவில்லை. ஆனால் நமது பிரதமரை அவமானப்படுத்தும் வகையில் நவாஸ்ஷெரீப் பேசுகிறார்.

அதற்கு நமது அரசு கண்டனம் தெரிவிக்க வில்லை. பிரதமர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அதிபர் ஒபாமாவை சந்தித்துப்பேசினார். அவரிடம், நான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன். எனது நாடு ஏழைநாடு என்று பேசுகிறார். ஏன் நமது நாட்டின் பலங்களை அவரிடம் சொல்லமறுக்கிறீர்கள் நீங்கள். நாம் ஏழைகள் அல்ல என்பதை ஏன் நீங்கள் சொல்லமறுக்கிறீர்கள். நாட்டுக்கு எவ்வளவு பெரியகேவலம் இது.

உங்களுக்கு இந்த நாட்டின் ஏழ்மை வியாபாரப் பொருளாகிவிட்டது… காங்கிரஸ் கட்சியே நமதுபிரதமரை மதிப்பதில்லை. பிறகு ஷெரீப் எப்படி மதிப்பார். ராகுல்காந்தி பிரதமரை மதிப்பதில்லை. இப்போதுகூட நான்சென்ஸ் என்று கூறிப் பேசுகிறார் அவர். என்னைப்பற்றி ஒபாமாவிடம் புகார் கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன்சிங் என்று கூறுகிறார் ஷெரீப். என்ன தைரியம் அவருக்கு… ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை நமதுபிரதமர்.

Narendra Modi addresses Vikas Rally in Delhi

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரைத் திரும்பத்தாருங்கள் என்று பாகிஸ்தான் பிரதமரிடம் அவர்கேட்பாரா…. எல்லையில் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட நமதுவீரர்களின் குடும்பத்தினரின் குரல்களை பாகிஸ்தான் பிரதமரிடம் தெரிவிப்பாரா… பிறகு ஷெரீப்பிடம் என்னதான் பேசப்போகிறார் மன்மோகன்சிங். நான் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை கேட்க விரும்புகிறேன் – நீங்கள் காங்கிரஸின் பட்டத்துஇளவரசன் தலைமையில் செயல்பட விரும்புகிறீர்களா அல்லது இந்திய அரசியல் சாசனச்சட்டத்தின் கீழ் செயல்பட விரும்புகிறீர்களா…

காங்கிரஸின் பட்டத்து இளவரசன், பிரதமரின் பாஸ்போல செயல்படுகிறார். அவரால், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளிடமும் இதேபோல செயல்படமுடியுமா… 2014 ம் ஆண்டு கனவு அணியை நமது நாட்டுமக்கள் விரும்புகிறார்கள். அசிங்கமான அணி அவர்களுக்கு தேவையில்லை. இந்தியாவுக்கு தேவை கனவு தான்.

இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள், தவிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேலைதரும் கனவு நமது மத்திய அரசிடம் இல்லை. ஒவ்வொரு முறை ரயில்வேபட்ஜெட் வரும்போதும் நாம் கேட்பது கட்டணம் குறைந்திருக்கிறதா அல்லது உயர்ந்திருக்கிறதா என்று. பட்ஜெட் வரும் போது சென்செக்ஸ் உயர்ந்திருக்கிறதா, சரிந்திருக்கிறதா என்று. எதுதான் நமக்கேற்ற பட்ஜெட், நமக்கானபட்ஜெட்… அரசிடம் கனவு இல்லை. நான் உங்கள் சேவகன், மக்கள்சேவகன். மக்களுக்கான எனதுசேவை தொடரும். அதற்கு நான் உறுதியளிக்கிறேன்.

உங்கள்கனவை நான் நிறைவேற்றுவேன். அத்வானி, வாஜ்பாய், குஷாபாவ் தாக்கரே ஆகியோரிடமிருந்து நாம் நிறையகற்றிருக்கிறோம். உங்களுக்காக சேவைசெய்ய நான் வந்துள்ளேன். பா.ஜ.க.,வை நம்புங்கள். பாஜகவோ அல்லது மோடியோ, உங்களையும், உங்களதுகனவையும் கலைக்கமாட்டார்கள், துரோகம்செய்ய மாட்டார்கள். நான் சர்வாதிகாரி அல்ல, வேலைக் காரன். பாஜக ஒரு ஜனநாயகக்கட்சி. சாதாரண மனிதனாக இருந்து நான் இந்த இடத்திற்குவந்துள்ளேன். இதற்காக உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என்று பேசி தனது உரையை நிறைவு செய்தார் நரேந்திரமோடி.

தனது பேச்சை நிறைவுசெய்த மோடி, வந்தே என சொன்னார். அதைத்தொடர்ந்து பா.ஜ.க.,வினர் மாதரம் என்று கோஷமிட்டனர். வந்தே என்ற வார்த்தையை திரும்பத்திரும்ப வேகமாக தொடர்ந்துகூறினார் மோடி. இந்தவார்த்தை வாஷிங்டனில் அமர்ந்துள்ள நமது பிரதமருக்கு கேட்டு அவருக்கு ஊக்கம்தரட்டும் என்றும் மோடி தனது பேச்சின் போது கூறியதால் பா.ஜ.க.,வினர் படு உற்சாகமாக மாதரம் என திரும்பத் திரும்ப கோஷமிட்டனர்.


  • நேரலை

    Stay Tuned For Live Events

  • நிர்வாகம்

  • செய்திகள்

    மோடியின் டாக் ...

    நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

    காணொளி

  • கட்டுரைகள்

  • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service