பா.ஜ.க பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதவருமான நரேந்திரமோடி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்ட பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
மோடி பிர்சாமுண்டா விமான நிலையத்தில் இருந்து கூட்டமேடைக்கு ஹெலிகாப்டரில் வந்தார் . கூட்டம் நடக்கும் மைதானம் சி.சி. டிவி காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டது. இதற்க்கான பொதுக்கூட்டமேடை பாராளுமன்ற வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.
பொதுக்கூட்ட பேரணியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது ; ஏராளமான கனிமவளங்கள் ஜார்கண்டில் இருந்தும் ஏன் ஏழ்மையில் அந்தமாநிலம் உள்ளது.
அடல்பிகாரி வாஜ்பாயி, ஜார்கண்ட் மக்களின் தேவைகள் மற்றும் இலக்குகளை புரிந்து கொண்டிருந்தார்.வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் 2000 ஆம் ஆண்டு ஜார்கண்ட், சத்தீஷ்கர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மூன்று மாநிலங்கள் உருவாக்கபப்ட்டன.
ஜார்கண்ட் மாநிலவளர்ச்சியை மத்திய அரசு புறக்கணிக்கிறது. தற்போது டெல்லியில் அமர்ந்திருப்பவர்கள் உங்களையும் உங்களின் முனனேற்றத் தையும் புறக்கணிக்கிறார்கள். ஜார்கண்ட், சத்தீஷ்கரை விட முன்னேற்றத்தில் பின்தங்கியிருக்கிறது. சத்தீஷ்கர் முன்னேறியதற்கு பாஜக ஆட்சி அமைய மக்கள் வாய்ப்புவழங்கியதே காரணம்.
நாங்கள் மக்களின் வளர்ச்சி மற்றும் நன்மையைமட்டும் பார்க்கிறோம். ஜார்கண்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எங்களை தேர்ந்தெடுங்கள் இங்கு பெரும்பிரச்சனையாக உள்ள வேலையில்லா திண்டாட்டத்தை மாற்றி காட்டுகிறோம் என்றார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.