‘சேமித்து வைக்க இடமில்லாவிட்டால், கோதுமையை, ஏழைகளுக்கு வினியோகியுங்கள்”

November-23-13

நரேந்திர மோடி, கந்த்வா என்ற இடத்தில், நடந்த கூட்டத்தில் பேசியதாவது:மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறுவதில், காங்., தலைமையிலான, மத்திய அரசை, மிஞ்சுவதற்கு ஆள் இல்லை. நாடு முழுவதும் உள்ள, இந்திய உணவு கழகத்துக்கு சொந்தமான சேமிப்பு கிடங்குகளில், ஏராளமான கோதுமை, அழுகி, வீணாவதாக, புகார் எழுந்தது.இதையடுத்து, ‘சேமித்து வைக்க இடமில்லாவிட்டால், கோதுமையை, ஏழைகளுக்கு வினியோகியுங்கள்’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனாலும், ஏழைகளுக்கு, கோதுமையை வழங்க, மத்திய அரசுக்கு, மனம் வரவில்லை.

ஏழைகளுக்கு வழங்குவதற்கு பதிலாக, ஒயின் தயாரிக்கும், மதுபான நிறுவனங்களுக்கு, கோதுமையை, மத்திய அரசு வழங்குகிறது. ஒரு கிலோ கோதுமை, 80 பைசாவுக்கு, மதுபான நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது.மத்திய பிரதேசத்தில், காங்., ஆட்சி நடத்தியபோது, கிராமங்களுக்கு மின் வசதி இல்லை; கட்டமைப்பு வசதிகளும் இல்லை. தற்போது, பா.ஜ., ஆட்சியில், அனைத்து கிராமங்களுக்கும், மின் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. சாலைகள் இல்லாத கிராமங்களே இல்லை. இதற்காக, முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகானை பாராட்டுகிறேன்.இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service