சூழலியல், சுற்றுச் சூழல்- சமனிலைப்படுத்துதல்”

February-6-14

”எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கு ஏற்ற இடமாக குஜராத்தை உருவாக்க விரும்புகிறேன்” என்று கூறுவார் நரேந்திர மோடி. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வள பாதுகாப்பிலும் அவர் கவனம் செலுத்துகிறார். சுற்றுச் சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு என்ற இரண்டு அம்சங்களின் அடிப்படையில் திட்டங்கள் உருவக்கப்பட்டுள்ளன.

சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை எப்போதும் தொழிலதிபர்களிடம் நரேந்திர மோடி வலியுறுத்துவார். நகரங்களிலும் கிராமப் புறங்களிலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசின் அளவு எவ்வளவு குறைவாக இருக்க வேண்டுமோ அவ்வளவு குறைவாக இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக ஏராளமான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருக்கிறார். எரிவாயு பயன்பாட்டின் மூலமாக பொதுமக்களின் போக்குவரத்து முறை அதிகரிக்க வேண்டும் என்பதற்கு அவர் தொடர்ந்தும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அரசு பேருந்துகள் எரிவாயு கலன்களைக் கொண்டதாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

காலநிலை மாற்றத்துக்கான செயல்திட்டம்

வீடியோ இணைப்பு:

ஒரு நல்ல அரசு நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றாக காலநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ள தனியே ஒரு துறையை நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார். இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே காலநிலை மாற்றத்துக்காக தனித் துறை உருவாக்கப்பட்டிருப்பது குஜராத் மாநிலத்தில் மட்டுமே. உலகிலேயே இப்படி ஒரு தனித் துறையை உருவாக்கியுள்ள 4 வது மாநிலமும் குஜராத்.

2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நரேந்திர மோடி தலைமையில் இத்துறை உருவாக்கப்பட்டது. காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளை இத்துறை கையாளும். மனிதர்கள் எதிர்கொள்ளும் சுற்றுச் சூழல் பிரச்சனைகள், அது தொடர்பான மக்களின் மன மாற்றம் போன்றவற்றை இத்துறை கையாண்டு கவனமுடன் செயல்படுவதால் குஜராத் மாநிலம் மிகவும் பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது. சுரங்கங்கள், பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள், வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறைகள், ஊரக மேம்பாடு என பல துறைகளில் இது கவனம் செலுத்தி வருகிறது. மாநிலத்தின் 1600 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையில் புவிவெப்பமயமாதலின் விளைவுகள் தொடர்பாகவும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

சுற்றுச் சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை மாநில அரசு முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் சுற்றுச் சூழலின் மீது அக்கறையுள்ள சமூகமாக உருவாக வேண்டும் என்பதற்காக இத்தகைய செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்பை அதிகப்படுத்தியுள்ளது. GEER Foundation எனப்படும் Gujarat Ecological Education and Research Foundation நிறுவனம், GEC எனப்படும் Gujarat Ecology Commission மற்றும் GEMI எனப்படும் Gujarat Environmental Management Institute ஆகியவை சுற்றுச்சூழல் சார் விவகாரங்களைக் கையாண்டு பாதுகாப்பாக சுற்றுச் சூழலை மாநிலத்தில் உருவாக்கி வருகின்றன.

காலநிலை மாற்றம் தொடர்பான நரேந்திர மோடியின் புத்தக வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய உரை:


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service