சுஜலாம் ,சுபலாம் வடக்கு குஜராத்துக்கு ஒரு வரப்பிரசாதம்”

March-3-14

 நரேந்திர மோடி அவர்களின்  ”சுஜலாம் ,சுபலாம் யோஜனா’வின்  கீழ் நர்மதை ஆற்றில்  நிறைவேற்றப்பட்ட   சர்தார் சரோவர் பல் நோக்குத் திட்டம் நீரற்று வறண்ட  வடக்கு குஜராத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக  அமைந்துள்ளது.

சர்தார் சரோவர் மற்றும்  கடனா  அணைகளிலிருந்து வெளியேறும் 1200 கன  அடி உபரி நீர் 310 கி மீ நீளமுள்ள  சுஜலாம் சுபலாம்  விரிவுக் கால்வாயில் விடப்படுகிறது ; இது காந்திநகர், சபர்காந்தா , மேஹசனா  , பட்டான் ஆகிய மாவட்டங்களுக்குப்  பயன் அளிக்கிறது.
இதுபோலவே நர்மதை பிரதான வாய்க்கால், மற்றும் பிற அணைகளிலிருந்து விடப்படும் 18600 கன அடி உபரி மழை நீர்  வறண்ட சிற்றாறுகளான  ஹெரான், கரட், குன் , சபர்மதி ,ருபேன், பனஸ்  இவற்றுக்கு நீரோட்டம் அளித்துள்ளது.
மோடி அவர்களின் சுஜலாம் சுபலாம் திட்டத்தால் 210 ஏரிகளும், கணக்கற்ற வயற்காட்டுக்  குளங்களும் நீரால் நிரம்பியுள்ளன. மேலும் இது நிலத்தடி நீரையும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு வடக்கு  குஜராத்தின் நதிகளை இணைத்ததன் மூலம் முன்பு கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருந்த  உபரி மழை  நீர் நல்ல முறையில் பயன்படுகிறது.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service