சீரான வளர்ச்சி”

February-6-14

10வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டுக்கே 8.2% பொருளாதார வளர்ச்சி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. குஜராத்துக்கு 10.2% என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் குஜராத் மாநிலம் முதலாவது ஆண்டில் 15% பொருளாதார வளர்ச்சியை எட்டி சாதனை படைத்தது.

பொருளாதார வளர்ச்சி என்பது சீரானதாக இருக்க வேண்டும். குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பின்னர் அரசாங்கத்தின் செலவினங்கள் குறைக்கப்பட்டு அரசுக்கு வரவேண்டிய வருவாயை அதிகரிப்பதில் முனைப்பு காட்டினார். ஆண்டுதோறும் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சியானது 11.3%ஆகவும் வேளாண் துறையில் 10.97%ஆகவும் இருந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ரூ7 ஆயிரம் கோடி பற்றாக்குறை என்ற நிலை மாறிப் போய் உபரி வருவாய் உள்ள மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

தொழிற்சாலைகளும் வீடுகளும் எரிவாயுவை தேவையான அளவு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எரிவாயு மீதான விற்பனை வரி 20%-ல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டது. நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களான ஜிஎஸ்எஃப்சி, ஜிஎம்டிசி, ஜிஐபிசிஎல், ஜிஎன்எஃப்சி, ஜிஏசிஎல் அனைத்துமே தங்களது சந்தையை முதலீட்டை அதிகரித்துள்ளன.

இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கு மின்சாரம் மிகவும் முக்கியமானது. குஜராத் மாநிலத்தின் முதல்வராக மோடி பொறுப்பேற்ற போது 2 ஆயிரம் மெகாவாட் மின்பற்றாக்குறை இருந்தது. நாடு முழுவதும் இதேமாதிரியான நிலைமை இருந்தது. அப்போதுதான் குஜராத் ‘ஜோதிகிராம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது குஜராத் மாநிலத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து நேரமும் மின்சாரம் வழங்கப்படும் என்பதுதான் இத்திட்டம். இன்று குஜராத் மாநிலம் மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. நரேந்திர மோடி கூறுகிறார், “குஜராத் மாநிலம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாராத்தை உபரியாக வைத்திருக்கிறது. இது 7 ஆயிரம் மெகாவாட்டாக 2012ஆம் ஆண்டு இறுதியில் இருக்கும்.. அதாவது இந்தியாவின் பல மாநிலங்கள் உற்பத்தி செய்யக் கூடிய ஒட்டு மொத்த மின்சாரம் குஜராத்தில் கையிருப்பில் உபரியாக இருக்கும் என்கிறார்.

சீரான பொருளாதார வளர்ச்சியுடன் சீரான நிதி கட்டமைப்பையும் அவர் உருவாக்கினார். சில குறிப்பிட்ட துறைகளுக்கு மின்கட்டண உயர்வு, மின் திருட்டு சோதனை, போலி ரேசன்கார்டு ஒழிப்பு போன்றவற்றை மேற்கொண்டார். மின்துறையிடமிருந்தான பண வரவு, வரி சீரமைப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தியதால் பொருளாதாரா ஆரோக்கியம் இம்மாநிலத்தில் சாத்தியமானது.

இதுமட்டுமின்றி வேளாண் துறை, ஆரம்ப மற்றும் உயர்கல்வி, பெண்கள் மேம்பாடு, சுற்றுலா, உள்கட்டமைப்பு, தொழில் அபிவிருத்தி, வாகன துறை அல்லது அன்னிய முதலீடு என எந்த ஒரு துறையையும் அவர் விட்டுவைக்கவில்லை.

குஜராத் மாநிலத்தின் சீரான வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ இணைப்பை பார்க்கவும்

இதேபோல் குஜராத்தில் நரேந்திர மோடி சீரான வளர்ச்சிக்கான எப்படியெல்லாம் முக்கிய திட்டங்களை முன்னெடுத்தார் என்பதையும் கீழே உள்ள வீடியோக்களை பார்க்கவும்


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service