சமையல், ‘காஸ்’ இணைப்பை இலவசமாக வழங்கும் திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்தார்”

May-1-16

நாடு முழுவதும், ஐந்து கோடி ஏழை குடும்பங்களுக்கு, சமையல், ‘காஸ்’ இணைப்பை இலவசமாக வழங்கும், 8,000 கோடி  மதிப்பிலான திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, துவக்கி வைத்தார்.

உ.பி., மாநிலம், பாலியா நகரில், சமையல் காஸ் இணைப்புகளை, ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கும் திட்ட துவக்கவிழா, மே தினமான நேற்று நடந்தது. இத்திட்டத்தின் கீழ், ஐந்து கோடி ஏழைகள் பயன்பெறுவர்.

திட்டத்தை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: முந்தைய அரசுகள் வகுத்த திட்டங்கள், ஏழைகளை மனதில் வைத்து உருவாக்கப் படவில்லை; ஓட்டுகளை வாங்கும் எண்ணத்தில்தான், அவற்றின் திட்டங்கள் இருந்தன. ஏழைகள் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே, வறுமையை ஒழிக்க முடியும். ஏழைகளுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, வீடு,

தரமான குடிநீர், மின்சாரம் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு, வறுமையை ஒழிக்க பாடுபட்டு வருகிறது. ‘பிரதம மந்திரி உஜ்வாலா’ திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களில் உள்ள பெண்களின் பெயரில், சமையல் காஸ் இணைப்பு, இலவசமாக வழங்கப்படும். முதல் ஆண்டில், 1.5 கோடி இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மூன்று ஆண்டுகளில், ஐந்து கோடி ஏழைகளுக்கு இலவசமாக, சமையல் காஸ் இணைப்பு அளிக்கப்படும்.
மத்திய அரசு நிறைவேற்றி வரும் அனைத்து திட்டங்களும், ஏழைகளுக்காகவே உருவாக்கப்பட்டவை. தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும்திட்டம், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை, 1,000 ரூபாயாக்கும் திட்டம் போன்றவற்றை மத்திய அரசு துவக்கி உள்ளது. போனஸ் பெறத்தக்க, அதிகபட்ச ஊதியம், 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. போனஸ் தொகை உச்சவரம்பும், 7,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

|

 

வருங்கால வைப்பு நிதி கணக்கை, புதிய கணக்குக்கு மாற்றிக் கொள்ளும் திட்டம் அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது.வசதி படைத்தோர், சமையல் காஸ் மானியத்தை கைவிடும்படி, தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதை ஏற்று, நாடு முழுவதும், 1.10 கோடி பேர், மானியத்தை கைவிட்டுள்ளனர்.இதன் மூலம் கிடைக்கும் தொகை, ஏழைகளுக்கு, இலவச சமையல்காஸ் இணைப்பு அளிக்க பயன்படும்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service