கூகுள்பிளஸ் – ஹேங் அவுட்டின் மூலமாக கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மோடி”

March-19-13

அரசியலில் தொழில்நுட்பம்’ என்னும் தலைப்பில் பிரபல கம்ப்யூட்டர் தேடு பொறி இயந்திரமான (சர்ச் என்ஜின்) கூகுள்நிறுவனம் வரும் 21ம் தேதி ‘கூகுள்பிளஸ் – ஹேங் அவுட்டின் மூலமாக கருத்தரங்கம் ஒன்றை நடத்துகிறது.
இதில் இங்கிலாந்தின் பிரபல நாளிதழான ‘கார்டியனின் ஆசிரியர் ஆலன் ரஸ் பிரிட்ஜர், அமெரிக்க அதிபர் பராக்ஒபாமாவின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டளாராக இரண்டு முறை பணியாற்றிய ஸ்டெபானிகட்டர் உள்ளிட்ட உலக பிரபலங்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்று கின்றனர்.

இவர்களது வரிசையில் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியையும் கூகுள் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்தியாவின் எதிர் கால வடிவமைப்பில் வலை தளங்களின் பங்கு எனும் தலைப்பில் இந்த கருத்து அரங்கில் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

தொழில் நுட்ப மேம்பாடுகளை பயன் படுத்தி 3-டி வீடியோ கான்பிரஸ் மூலம் குஜராத் சட்ட சபை தேர்தல் பிரசாரத்தில் ஒரேநேரத்தில் 50 க்கும் அதிகமான இடங்களில் பேசி நரேந்திரமோடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.

டுவிட்டர் இணைய தளத்தில் மோடியை சுமார் 13 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு சாதனையாக கூகுள்பிளஸ் – ஹேங் அவுட்டின் மூலமாக கருத்தரங்கத்தில் கலந்து கொள்கிறார்.

 


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service