குயின்ஸ்லாந்து துணை முதல்வர் ஜெப்ரி வில்லியம் தலைமையிலான உயர் மட்டக் குழு மோடியுடன் சந்திப்பு”

August-27-13

குயின்ஸ்லாந்து மாநில துணை முதல்வர் ஜெப்ரி வில்லியம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து குஜராத்- ஆஸ்திரேலிய -குயின்ஸ்லாந்து இடையேயான பரஸ்பர நல்லுறவு  முன்னேற்றம் குறித்து நேரடியாக பேச்சு வார்த்தை மேற்கொண்டார்

இந்த சந்திப்பில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் மார்க் பியர்சும், குஜராத்தின் கூடுதல் முதன்மை  செயலாளர் எ.கே.சர்மா , கூடுதல் தலைமை செயலாளர் மகேஷ்வர் சாஹு மற்றும் தொழிலதிபர் கெளதம் அதானி ஆகியோர் ஆஸ்திரேலியா மற்றும் குஜராத் சார்பாக பங்கெடுத்துக் கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது இரண்டு குழுவினரும் வேகமாக மாறிவரும் பொருளாதார உலக சூழலில் குஜராத்- ஆஸ்திரேலிய இடையேயான கொள்கைகள் உருவாக்கம், பரந்த பொருளாதார, கலாசார உறவுகள் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டு பரிமாறி கொள்ளப்பட்டது. இதனிடையே குஜராத் முதல்வர் மோடியும்

 


ஜெப்ரி வில்லியமும் குஜராத்-குயின்ஸ்லாந்து இடையேயான நிலையான பொருளாதார ஊக்குவிப்பதற்கான மற்றும் வளர்ச்சியை எட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்த கூட்டு விவாதம் மேற்கொண்டனர்.

அதோடு படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய/குஜரத்தியர்களைப் பற்றிய தகவல்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டது . இச்சந்திப்பு நடந்த அதேவேளையில் செப்-9 மற்றும் 10 தேதிகளில் குஜராத்தில் நடைபெறவுள்ள உலக விவசாய மாநாட்டில் ஆஸ்திரேலியா வர்த்தக குழுவை பங்கேற்க அழைப்பு விடுத்தார்

குஜராத் முதல்வர் மோடி இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகாமாகி வரும் இந்த வேளையில் அடுத்தடுத்து உலக நாடுகளின் முக்கியப் பிரதிநிதிகள் சந்தித்து அவருடனான நெருக்கத்தை அதிகப் படுத்திக் கொள்ள முன்வருவது குடிப்பிடத்தக்கது

நன்றி; தமிழில் சிவபிரகாஷ்


  • நேரலை

    Stay Tuned For Live Events

  • நிர்வாகம்

  • செய்திகள்

    மோடியின் டாக் ...

    நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

    காணொளி

  • கட்டுரைகள்

  • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service