குஜராத் முதல்வரும், பா,ஜ,க பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி இன்று தனது 64வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதனைமுன்னிட்டு அவர் தனது தாயை சந்தித்து ஆசிபெற்றார்.
நரேந்திரமோடியின் தாயான 94 வயதாகும் ஹிராபா தங்கியிருக்கும் வீட்டுக்கு இன்று காலை சென்ற நரேந்திமோடி, தாயிடம் ஆசிபெற்றார்.
வாழ்கையில் மிகச்சிறந்த வாய்ப்புகளை பெறுவாய் என்று மோடியை வாழ்த்தினார் அவரது தாய். சிறிதுநேரம் தாயுடன் அமர்ந்து பேசிய மோடி, அக்கம்பக்கத்தினர் கூறிய வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொண்டார்.
பின், மோடி கூறியதாவது:என் தாயிடம் ஆசி பெறுவதற்காக, இங்கு வந்தேன். தாயிடமிருந்து கிடைக்கும் ஆசியை விட, வேறு பெரிய ஆசி எதுவும் இல்லை. என் பிறந்த நாளை, நாடு முழுவதுள்ள தொழிலாளர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்.ஏராளமான மக்கள், எனக்கு இன்று வாழ்த்து தெரிவித்தனர். ஏழை மக்கள் தான் அதிகம் வாழ்த்தியுள்ளனர். இந்த வாழ்த்துக்களும், ஆசிகளும், கண்டிப்பாக வீண் போகாது. இவர்களின் ஆசிகள், எனக்கு பலத்தை தந்துள்ளன. இந்த நாளில் தான், நிஜாம் ஆட்சியிலிருந்து, ஐதராபாத்தை, சர்தார் வல்லபாய் படேல் மீட்டார்.இவ்வாறு, அவர் கூறினார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.