குஜராத் மாநில வளர்ச்சியை உலகம் உற்று பார்க்கிறது”

May-13-13

குஜராத் நிறுவன தினத்தைமுன்னிட்டு ஆமதாபாத்திலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அமெரிக்கா வின் 18 நகரங்களில் வசிக்கும் இந்தியர்களிடம் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: உங்கள் அனைவரின் அன்பும்

ஆதரவும்தான் எனக்குபலம் தருகிறது. புனிதநதியாம் கங்கையின் தற்போதைய நிலை கவலை தருகிறது. நமது அன்னையாக கருதும் கங்கையை தூய்மையாக வைக்க அனைவரின் ஒத்துழைப்பும்தேவை;

உலகம் எங்கும் குஜராத் தினகொண்டாட்டம் மகிழ்ச்சி தருகிறது. குஜராத் மக்கள் கலாச்சாரதூதர்களாக செயல்படுவது பலம் அளிக்கிறது. குஜராத்தில் 24 மணிநேர மின் வசதி செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநில வளர்ச்சியை உலகம் உற்று பார்க்கிறது.

குஜராத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிகள் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது; குஜராத்தின் சிலபகுதிகளில் இன்னும் வளர்ச்சி தேவைப் படுகிறது; மோடி வருவதற்கு முன்பே குஜராத்தில் எதுவும் இல்லை என்று நான் கூறவில்லை; அதேசமயம் குஜராத் தற்போது கண்டுள்ளவளர்ச்சியை அனைவரும் அறிவர். நான் ஆட்சிக்குவருவதற்கு முன் இங்கு காற்றாலைதொழில்கள் இல்லை; ஆனால் இன்று பெருமளவில் வளர்ச்சிகண்டுள்ள காற்றாலை சக்தி, பலபேருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தியுள்ளது; குஜராத்தில் அனைத்தும் உள்ளது; ஆனால் சுற்றுலாத் துறை இல்லாமல் இருந்தது; அதனையும் சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சன் துவக்கிவைத்துள்ளார்; இன்று பலபகுதிகளிலும் இருந்து மக்கள் குஜராத் வந்துசெல்கின்றனர்; தாஜ்மஹாலுக்கு இணையாக குஜராத்தை மக்கள் கருதுகின்றனர்;

குஜராத்தில் ஊட்டசத்துகுறைபாடு அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் அரசு குற்றம் சுமத்துகிறது. ஆனால் சமீபத்திய சி.ஏ.ஜி., அறிக்கைபடி குஜராத்தில் 2001ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 33சதவீதம் ஊட்டசத்து அதிகவளர்ச்சி பெற்றுள்ளது; கிராமப்புறவீடுகள் அனைத்திலும் தொழில்நுட்பம் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். சிக்கலைநோக்கி செல்லும் நமதுதேசத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்ல போராடும் முதல் இந்தியன் நான். சர்வதேசமாநாட்டில் தவறான அறிக்கையை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வாசித்துள்ளது நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம்; உலகின் மிகப்பெரிய சிலையாக சர்தார்பட்டேலின் சிலையை குஜராத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்; நிறைய அமெரிக்கதலைவர்கள் இந்த உரையை கேட்டு கொண்டிருப்பார்கள் என எனக்குதெரியும். ஆனால் நான் இந்தியில் பேசுவதால் நீங்கள் எனதுகருத்தை அவர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும். முன்னேற்றத்தை நோக்கிச்செல்ல அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்று மோடி தெரிவித்துள்ளார்.

 


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service