குஜராத் காவல் துறையில் முஸ்லீம் போலீஸ்காரர்கள் எண்ணிக்கை அதிகம்”

November-17-12

இந்துமத வெறியன் முஸ்லீம்களை கொன்று குவிக்கும் கொலையாளி என.”செக்யூலர் மீடியாவால்” வர்ணிக்கப்படும்..குஜ்ராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் ஆட்சியில்.. குஜராத் காவல் துறையில் முஸ்லீம் போலீஸ்காரர்கள்

எண்ணிக்கை அதிகம்–என “டைம்ஸ் ஆஃப் இந்தியா” பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய மாநிலங்களின் காவல் துறையில் முஸ்லீம்கள் எண்ணிக்கை அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் அமைந்துள்ளதா? இல்லையா? என்பதை தெரிந்துகொள்ள மத்திய அரசிடம் இருந்து “டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை பெற்ற தகவல்தான் இந்த விவரத்தை கொடுத்துள்ளது.

குஜராத்தின் 510 காவல் நிலயங்களில் 5021 முஸ்லீம் காவலர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாவது “ஸ்டேஷனுக்கு” 10 பேர் முஸ்லீம். மக்கள் தொகை அடிப்படையில் அதாவது.. மொத்த மக்கள் தொகையில் 9.1 சதம் முஸ்லீம்கள். அதற்கு 10.6 சதவீதம் முஸ்லீம்கள் போலீஸ் வேலை பார்க்கிறார்கள்.

இந்தியாவிலேயே. முஸ்லீம் மக்கள் தொகை அடிப்படையில் “மோடி ராஜ்ஜியத்தில் ” மட்டும்தான் அதிக வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளத காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அல்ல.

எவ்வளவு அடிச்சாலும் மோடிக்கு வலிக்காது . எவ்வளவு கடிச்சாலும் மோடி எதிர்ப்பாளர்கள் திருந்த மாட்டார்கள்.

நன்றி; எஸ்.ஆர்.சேகர்

பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்


  • நேரலை

    Stay Tuned For Live Events

  • நிர்வாகம்

  • செய்திகள்

    மோடியின் டாக் ...

    நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

    காணொளி

  • கட்டுரைகள்

  • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service