
தாய்லாந்து சென்ற குஜராத் மாநில காவல்துறை தலைவர் அமிதாப் பதக் இன்று அங்கு மாரடைப்பால் மரணமடைந்தார். தனது குடும்பத்தினருடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற அவர் பாங்காக் நகரில் இறந்தார். அவருக்கு வயது 58.
நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சுதந்திர தினத்தன்று முதல்வர் நரேந்திர மோடி புஜ் நகரில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அருகில் நின்றிருந்த பதக் மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது. மிகவும் களைப்பாக இருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக பதக் தெரிவித்திருந்தார். இந் நிலையில் தாய்லாந்தில் மரணமடைந்துள்ளார்.
முதல்வர் நரேந்திர மோடி அமிதாப் பதகின் மரணத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அவரது மரணம் குஜராத் காவல்துறைக்கு பேரிழப்பு என்றார்.