குஜராத் கலவரவழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாஜக. முன்னாள் அமைச்சர் மாயாகோட்னானி உள்ளிட்ட பத்து பேருக்கு தூக்குதண்டனை விதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்ய நரேந்திரமோடி அரசு முடிவு செய்துள்ளது .
குஜராத்தில் கோத்ரா ரயில்_எரிக்கப்பட்ட மறுநாள் 2002ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நரோடாபாட்டியா எனும் இடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் சிறுபான்மையினர் பலர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தவழக்கில் மொத்தம் 70பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.
இதில் கோட்னானிக்கு 28 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 8 பேருக்கு 31 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 22 பேருக்கு 24 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.