காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளில் படித்து வரும் 20 மாணவிகள், எல்லை பாதுகாப்பு படையினரின் உதவியுடன் நாடு முழுவதும் இன்பச்சுற்றுலா சென்றுள்ளனர். அதன்படி பல்வேறு மாநிலங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் குஜராத் மாநிலத்துக்கு சென்றனர்.
அங்குள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட அவர்கள் மாநில முதல்–மந்திரி நரேந்திர மோடியுடன் சந்தித்து உரையாடினர். அப்போது மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அங்கு நிலவி வரும் அமைதியான சூழல் குறித்து நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது எல்லை பாதுகாப்பு படை மூத்த வீரர்கள் உடன் இருந்தனர்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.