காங்கிரஸ் கட்சிக்கு மன்னராட்சியின் மீதுதான் நம்பிக்கை உள்ளது. ஜனநாயக ஆட்சி மீது நம்பிக்கை கிடையாது”

November-19-13

ஹிந்து, முஸ்லிம் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவது காங்கிரஸ் கட்சிதான் என்று, பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 1ம் தேதியன்று தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி சவாய் மதோபுர், ஆல்வார், பண்டிகுய் ஆகிய இடங்களில் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி, பிரித்தாளும் மனோபாவம் கொண்டது. பிரித்தாளும் வேலை ஒன்றையே அக்கட்சி செய்து வருகிறது. மக்களிடையே ஒற்றுமையே ஏற்படுத்துவது குறித்து அக்கட்சி ஒருபோதும் சிந்தித்தது கிடையாது. பிரிவினையை எப்படி ஏற்படுத்துவது என்பது குறித்து மட்டும் தெரிந்து வைத்திருக்கிறது. இதுதான் அக்கட்சியின் பாணியாகும்.

வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்துவதும், ஹிந்து மற்றும் முஸ்லிம் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதும் காங்கிரஸ் கட்சிதான். இது அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஓட்டு வங்கி அரசியலுக்காக இதுபோன்ற செயலில் அக்கட்சி ஈடுபடுகிறது.

தில்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் குறைவாகவே வந்திருந்தது. அதைக் கண்டு தர்மசங்கடம் அடைந்த முதலமைச்சர் ஷீலா தீட்சித், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்று கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டது. மறுபக்கம், பிரசார கூட்டத்திற்கு வந்தும் கூட்டம் அதிகம் இருக்கும் காரணத்தினால், என்னை காண முடியாமல் வருத்தம் அடையும் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு பிரசாரக் கூட்டம் நடக்கிறது.

விலைவாசி அதிகரிப்பால் பாமர மக்கள் துன்பப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலம், தண்ணீர், வானம் என்று அனைத்திலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல் செய்துள்ளது.

ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு: ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸ் கூட்டணி அரசு பாதுகாப்பு அளிக்கிறது. அவர்களின் இளவரசர் (ராகுல் காந்தி) ஏழ்மை என்பது ஓன்றுமில்லை என்கிறார். ஏழ்மை என்றால் என்னவென்றே தெரியாத அவர், ஏழ்மை நிலையை எப்படி புரிந்து கொள்வார். காங்கிரஸ் கட்சிக்கு மன்னராட்சியின் மீதுதான் நம்பிக்கை உள்ளது. ஜனநாயக ஆட்சி மீது நம்பிக்கை கிடையாது.

நாட்டில் வெங்காய விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர் முதலில் சதம் அடிப்பாரா அல்லது வெங்காய விலை முதலில் சதம் அடிக்குமா என்று மக்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

“நம்பர் ஒன்’ மாநிலம்: இந்தியாவிலேயே “நம்பர் ஒன்’ மாநிலம், ராஜஸ்தான் மாநிலம்தான் என்று அந்த மாநில முதலமைச்சர் அசோக் கேலாட் கூறுகிறார். அவரது கூற்றை நானும் ஆதரிக்கிறேன். பழங்குடியினருக்கு எதிராக அடக்குமுறை, மோசமான குடிநீர் வசதி, குற்ற வழக்குகளில் ஏராளமான அமைச்சர்கள் சிறையில் இருப்பது ஆகியவற்றில் ராஜஸ்தான் மாநிலம் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது.

குஜராத்தில் எனது தலைமையிலான அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை அசோக் கேலாட் குறை கூறுகிறார். எனது அரசின் வளர்ச்சி திட்டங்களை இந்தியா அங்கீகரித்துள்ளது. உலகமும் அங்கீகரித்துள்ளது என்று கூறினார் நரேந்திர மோடி.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service