காங்கிரஸ்க்கு 60 வருடங்களை தந்து விட்டீர் எங்களுக்கு 60 மாதங்களை தாருங்கள்.”

October-26-13

உ.பி.,யில் ஜான்சியில் நடைபெற்ற பாஜக. பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல்மந்திரி நரேந்திரமோடி பேசியதாவது:-

ஜான்ஸி ராணி பிறந்தமண்ணில் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏழை மக்களின் கண்ணீரை துடைக்கவே நான் இங்குவந்துள்ளேன். பிறரைபோல கண்ணீர் வடித்துபேச மாட்டேன். இந்த பகுதியில் நீர் ஆதாரம் இருந்தும் விவசாயிகள் முன்னேற முடிய வில்லை. காரணம் டில்லியில் உள்ளவர்கள் விவசாயிகள்குறித்து கவலை அடையவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது, இதற்கானகாரணத்தை மத்திய அரசு தெரிவிக்கவேண்டும். மத்திய அரசு ஒதுக்கியநிதி ஏழை மக்களை சென்றடையவில்லை. இது அவர்களின் பாக்கெட்டுக்கு சென்றது. இந்தநிதி எங்கே போனது? காங்கிரஸ், சமாஜ்வாடி, , பகுஜன்சமாஜ் உள்ளிட்ட கட்சியை வீட்டிற்கு அனுப்பும் நேரம் இது

பாராளுமன்றதேர்தல் நெருங்கும் வேளையிலும் ஊழலுக்கு எதிராக என்னசெய்ய போகிறோம்? என்று பேச காங்கிரஸ்கட்சி மறுத்து வருகிறது. பண வீக்கம், விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும் பதில் அளிக்காமல் அவர்கள் மவுனம்சாதிக்கின்றனர்.

Narendra Modi Addresses Huge BJP Rally in Jhansi.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருஅரசு மக்களுக்கு பதில் அளிக்கவேண்டாமா? ஆனால், தங்களை இந்நாட்டின் ராஜாக்களாகவும் இளவரசர்களாகவும் கருதிக்கொண்டிருப்பவர்கள் பதில் அளிக்க விரும்பவில்லை.

மக்களாகிய நீங்கள் காங்கிரஸ்கட்சிக்கு 60 ஆண்டுகள் ஆட்சிசெய்யும் பொறுப்பை தந்தீர்கள். எங்களுக்கு 60 மாதங்களைதாருங்கள்.

ஒருகாலத்தில் ரெயில்களில் டீவிற்ற என்னை பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராக பாஜக. அறிவித்துள்ளது.

என்னை நீங்கள் பிரதமராக்கவேண்டாம். இந்நாட்டின் காவல்காரனாக (வாட்ச் மேன்) மட்டும் நியமித்தால்போதும். உங்கள் காவல் காரனாக டெல்லியில் அமர்ந்து நாட்டின் கஜானாவில் யாரும்கைவைக்க முடியாதபடி நான் காவல்காப்பேன் .

Narendra Modi Addresses Huge BJP Rally in Jhansi.

1984 ல் கலவரத்தினால் பாதிக்கப் பட்டவர்களை ராகுல் காயப்படுத்துகிறார்.முஷாபர் பூரில் கலவரம் நடந்த போது பாதிக்கப்பட்டவர்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யைத் தொடர்புகொண்டதாக நமது உளவுத்துறை தகவல் கொடுத்தது என்று ராகுல்கூறுகிறார். ரகசிய காப்பு பிரமாணம் எடுக்காதராகுலுக்கு, முஷாபர்நகர் கலவரம் குறித்து உளவுதுறை எப்படி தகவல் வழங்கியது ?  திட்டக் கமிஷன் ஒரு நாளைக்கு ரூ. 32 வருமானம்போதும் என்கிறது. காங்கிரஸ் காரர்களால் இதுபோன்று வாழ முடியுமா ?  என்று கேள்வி எழுப்பினார்.

Narendra Modi Addresses Huge BJP Rally in Jhansi.

Narendra Modi Addresses Huge BJP Rally in Jhansi.

Narendra Modi Addresses Huge BJP Rally in Jhansi.

Narendra Modi Addresses Huge BJP Rally in Jhansi.

Narendra Modi Addresses Huge BJP Rally in Jhansi.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service