குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சட்டீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், அங்கு ஆளும் பாஜக முதல்வர் ராமன்சிங்கை ஆதரித்து ஜக்தல்பூரில் பிரச்சாரக்கூட்டத்தில் பேசினார். அப்போது மோடி பேசியதாவது:
வரும் ஆண்டுகளில் ராமன்சிங் தலைமையிலான சட்டீஸ்கர் குஜராத்தை விட வேகமாக வளரும், உணவு பாதுகாப்பு மசோதாவை நாங்கள் தான் கொண்டுவந்தோம் என்று காங். பெரும் தலைகள் சொல்கிறார்கள் ஆனால் முதன்முதலாக உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டுவந்து, நடைமுறைப்படுத்தியது ராமன்சிங் தலைமையிலான சட்டீஸ்கர் மாநில பாஜக அரசு, என்றார்
மேலும் அடல்பிகாரி வாஜ்பாய் சிறு வன்முறையின்றி மூன்று மாநிலங்களை உருவாக்கினார், இதில் உத்தர்கண்ட், ஜார்கண்டைவிட சட்டீஸ்கர் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸை நீங்கள் தேர்ந்தெடுக்காததே. இங்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு காரணம் ராமன்சிங்கை நீங்கள் தேர்ந்தெடுத்ததே என்றார்.
பாஜக ஆளும் சட்டீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 11 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.