காங்கிரஸின் பாவத்திலிருந்து தோன்றியவைதான், சமாஜ்வாதி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சிகள்”

November-22-13

ஓட்டுவங்கி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காங்கிரஸின் பாவத்திலிருந்து தோன்றியவைதான், சமாஜ்வாதி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சிகள். அந்த கட்சிகளும், ஓட்டுவங்கி அரசியலில் ஈடுபடுகின்றன. ஊழல் அரசியலின் ஒரு அங்கம் என, பலகட்சிகள் கருதுகின்றன,என்று பாஜக பிரதமர் வேட்பாளர், நரேந்திரமோடி கடுமையாக சாடியுள்ளார். Read More
உ.பி.,யின் ஆக்ரா நகரில், லோக்சபா தேர்தலுக்கான, பாஜக., ‘வெற்றி சங்க நாதம்’ என்ற பெயரிலான தேர்தல் பிரசாரகூட்டத்தில், பாஜக, பிரதமர்வேட்பாளர், நரேந்திரமோடி நேற்று பேசினார்.

லட்சக் கணக்கில் திரண்டிருந்த மக்கள்மத்தியில் அவர் பேசியதாவது:நான் இங்குவர சற்று தாமதமாகி விட்டது; அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உலக புகழ் பெற்ற தாஜ்மகால், இங்கே, ஆக்ராவில்தான் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து, லட்சக் கணக்கான சுற்றுலாபயணிகள் வந்துசெல்லும் இந்த நகருக்கு, விமான நிலையம்கிடையாது. இங்கு, விமானநிலையம் அமைக்கவேண்டும் என்ற எண்ணம், மத்திய அரசுக்கும், மாநில, சமாஜ்வாதி கட்சியின், முதல்வரான அகிலேஷ் அரசுக்கும் துளிகூட இல்லை. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு, எந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும், எந்த திட்டத்தை உடனடியாக துவக்கவேண்டும் என்பதெல்லாம் தெரியாது.

Narendra Modi addresses Vijay Shankhnad Rally in Agra

யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள ஆக்ராவில், குடிநீர்தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீருக்காக, இப்பகுதி மக்கள் ஆலாய் பறக்கின்றனர். சுத்தமான குடிநீர் இங்கு இல்லை. லக்னோவில் இருக்கும் முதல்வர், அகிலேஷ், சாதாரணமக்களுக்கு என்னதேவை என்பது பற்றி யோசிக்காததால்தான், ஆக்ராவிற்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வில்லை. அகிலேஷ் அரசுதான் இப்படி இருக்கிறது என்றால், மத்தியில் ஆளும், காங்கிரஸ் அரசும், அதற்குமேல் தான் உள்ளது. வளர்ச்சி திட்டங்கள்பற்றி யோசித்துகூட பார்ப்பதில்லை. ஓட்டுவங்கி அரசியலை, காங்கிரஸ் திடமாக பின்பற்றிவருகிறது. இயல்பிலேயே அந்தக்கட்சி, பிரித்தாளும் சூழ்ச்சி கொண்டகட்சி. அந்த கட்சி செய்தபாவங்களால் தோன்றியதுதான், உபி.,யின், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள்.

இப்போது அந்தகட்சிகளும், ஓட்டுவங்கி அரசியலை பின்பற்றுகின்றன. ஆனால், பாஜக., தேசியவாத நலன்களை அடிப்படையாககொண்டது. நாட்டுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்திருக்க வேண்டும், தேசம் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என, விரும்பும்கட்சி. வளர்ச்சியைமட்டுமே குறிக்கோளாக கொண்டவர்கள் நாங்கள். நாங்கள், ஜாதி, மதம் அல்லது வாரிசு அடிப்படையில் அரசியல்செய்வதில்லை. ஊழல், அரசியலின் ஒரு அங்கம் என, பலகட்சிகள் கருதுகின்றன; அதனால்தான், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள், ஊழலை ஒருபொருட்டாக மதிப்பதில்லை. அவர்களின்தோல், ஊழலால் தடிமனாகி விட்டது .

Narendra Modi addresses Vijay Shankhnad Rally in Agra

இந்த மாநிலத்தைசேர்ந்த, மத்திய அமைச்சர்களில் ஒருவர், 70லட்சம் ரூபாய், ஊழல் முறைகேட்டில் சிக்கியவர். இன்னொருவர், 70 லட்சம்போதாது; 70 கோடி வேண்டும் என்கிறார். இந்தமக்கள் ஆதரவுடன், வளர்ச்சி என்ற மந்திரத்தைகொண்டு, மாற்றத்தை ஏற்படுத்துவோம்.என்று நரேந்திர மோடி பேசினார்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service