கங்கையை தூய்மைபடுத்த ஒதுக்கப்பட்ட நிதிகள் எங்கே ஆற்றில் மூழ்கிபோனதா?”

December-21-13

 

கங்கை நதி தாயைபோன்றது. இதனை தூய்மைபடுத்த காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. இந்த நதிக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் எங்கே ஆற்றில் மூழ்கிபோனதா? கங்கையை சுத்தம் செய்ய வேண்டுமானால் நாம் முதலில் டில்லியில் உள்ள மத்திய அரசை சுத்தம்செய்ய வேண்டும். டில்லியில் சுத்தப்படுத்த கங்கையில் இருந்து நமதுபணியை துவக்குவோம். என்று பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
உ.பி., வாரணாசியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் மேலும் பேசியதாவது:

Narendra Modi addresses Vijay Shankhnaad Rally in Varanasi

லோக்சபாதேர்தல் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. மத்தியில் நடந்துவரும் ஆட்சியை வேரோடு பறித்து எறிய மக்கள் முடிவுசெய்துவிட்டனர். கங்கை நமது தாய்போல. ஆனால், அதை சுத்தம்செய்யாமல், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான ஒதுக்கப்பட்ட நிதி, கங்கையில் மூழ்கிவிட்டதா? கங்கையின் பெயரைகூறி காங்கிரஸ் ஓட்டுகேட்கிறது. காங்கிரஸ் மக்களை ஏமாற்றி விட்டது. எனவே, மக்கள் அக்கட்சிக்கு வரும்தேர்தலில் பாடம் கற்பிப்பார்கள். கங்கையை சுத்தப்படுத்த வேண்டுமானால் நாம் முதலில் டில்லியில் உள்ள அதிகாரத்தை சுத்தம்செய்ய வேண்டும்.

Narendra Modi addresses Vijay Shankhnaad Rally in Varanasi

நாங்கள் சொல்வதைத்தான் செய்வோம் : நான் சொல்வதை செய்வேன். குஜராத்தில் சொன்னதை செய்துகாட்டி உள்ளோம். அங்கு, சபர்மதிநதியை சுத்தப்படுத்தி உள்ளோம். சாபர்மதி சுத்தம்செய்யப்படும் போது, ஏன் கங்காவை சுத்தப்படுத்த முடியாது? எப்போதுமே நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதில்லை. சொல்வதைசெய்வோம். ஆனால், இங்கு வாக்குறுதிகளை கேட்டு, கேட்டு மக்கள் விரக்தியடைந்து விட்டனர். எனவே, வாக்குறுதிகளை செயலில்காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் சக்திதான் வழிகாட்ட போகிறது. விவசாயிகள் நாட்டின் எதிர் காலத்தை மாற்றும் சக்தி படைத்தவர்கள். ஆனால், ஊருக்கே உணவளிக்கும் அவர்கள் ஒருவேளை உணவைதேடும் நிலையில் உள்ளனர். யாரும் பசியால் இறந்துவிடக் கூடாது என விவசாயிகள் எண்ணுகின்றனர். அவர்களுக்கு பணம் பெரியதல்ல. மக்கள் நலனேமுக்கியம் என எண்ணுபவர்கள். ஆனால், விவசாயிகளின் புனிதமான இந்த நிலையை அரசு அறிந்து கொள்ளவில்லை. மாறாக, விளை பொருட்கள் மது தயாரிப்பதற்கு அனுப்பப்படுகின்றன. இது, விவசாயிகளின் கொள்கைகளுக்கு அவமதிப்பாகும்.

வரும் லோக்சபாதேர்தல் என்பது அரசியல்வாதிகளுக்கு இடையில் நடக்கும் போட்டியல்ல. மக்களுக்கும், காங்கிரசுக்கும் இடையில் நடக்க உள்ளபோட்டி. நாடு இப்போதுள்ள மோசமான சூழ்நிலைக்கு ஒரேஒரு குடும்பம் மட்டுமேபொறுப்பு. அது ஏழைகளை வெறுக்கிறது. என் மீது குறி வைத்துள்ளது, இதனால்தான், என்னை டீகடைக்காரன் என்று வர்ணிக்கிறது. மத்தியில் அந்த ஆட்சியை அகற்றுவதற்கு இது தான் நேரம். எங்களை திருடர்கள் என்கிறார்கள். ஆமாம், நாங்கள் திருடர்கள்தான். காங்கிரசின் தூக்கத்தையும், நிம்மதியையும் திருடியவர்கள்.

மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து ஜவுளிகளை இறக்குமதிசெய்கிறது. ஆனால், உள்நாட்டு உற்பத்தியாளர்களை அது ஊக்குவிப்பதில்லை. அரசின் மோசமானதிட்டங்களால், மக்கள் வாழ்வாதரங்களை இழந்து, இடம் பெயரவேண்டி உள்ளது. மத்தியில் பாஜக., ஆட்சி அமைந்தால்: புனிதமான கங்கைநதி சுத்தப்படுத்தப்படும், விவசாயிகள் நலனில் அக்கறைகாட்டப்படும், தகுதியின் அடிப்படையில் வேலைவழங்கப்படும், உள்நாட்டு ஜவுளி உற்பத்தி ஊக்குவிக்கப்படும், மக்களின் வளமான எதிர் காலம் உறுதி செய்யப்படும், இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோடி பேசினார்.

Narendra Modi addresses Vijay Shankhnaad Rally in Varanasi

Narendra Modi addresses Vijay Shankhnaad Rally in Varanasi

Narendra Modi addresses Vijay Shankhnaad Rally in Varanasi

Narendra Modi addresses Vijay Shankhnaad Rally in Varanasi

Narendra Modi addresses Vijay Shankhnaad Rally in Varanasi

Narendra Modi addresses Vijay Shankhnaad Rally in Varanasi


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service