உலகின் மிகஉயரமான சிலையாக வல்லபாய் படேலின் சிலை அமைய வேண்டும் என்பதற்கான சிறு முயற்சி இதை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய்படேலின் நினைவு தினத்தை முன்னிட்டு பா.ஜ.க “ஒற்றுமையைநோக்கி ஒடுவோம்” என்ற மாரத்தான் ஓட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியது.
இப்பேரணியை வடோதராவில் மோடியும், அகமதாபாத்தில் எல்கே.அத்வானியும், டெல்லியில் கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங்கும் தொடங்கி வைத்தனர்.
அப்போது ஓருலட்சம் பேர் திரண்டிருந்த கூட்டத்திற்கு மத்தியில்பேசிய மோடி, உலகின் மிகஉயரமான சிலையாக வல்லபாய் படேலின் சிலை அமைய வேண்டும் என்பதற்கான சிறுமுயற்சியாக இந்நிகழ்ச்சி நடக்கிறது . இதை அரசியல் கண்ணோட்டத்துடன் யாரும் அணுக வேண்டாம் இச்செயல் தேச ஒற்றுமைக்கும், தேசநலனுக்காகவும் நடத்தப்படுகிறது என்றார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.