ஒருங்கிணைந்த பொருளாதார மேம்பாடு”

February-6-14

நரேந்திர மோடியின் ”ஐம்பெரும் சக்திகளை ஒருங்கிணைத்தல்” எனும் தத்துவம் மூலமே ”Gyan (அறிவு சக்தி), Jal (நீர் சக்தி), Urja (எரிசக்தி), Jan (மனித சக்தி) and Raksha Shakti” (பாதுகாப்பு சக்தி ) மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது. இதனாலேயே மாநிலத்தின் ஒருங்கிணைந்த மேம்பாடு சாத்தியமாயிற்று.

இந்தியாவின் மேற்கு முனையில் குஜராத் அமைத்துள்ளது. நாட்டில் மிக நீண்ட கடற்கரை கொண்ட மாநிலங்களில் குஜராத் மாநிலம் 3வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலம் உருவானது முதல் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியானது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியிருக்கிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபரது சக்தியும் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் நகர்ப்புற பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை வெளிப்படுத்தி நிற்கிறது.

2001ஆம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கமானது மாநிலத்தை உருக்குலைய செய்தது. குஜராத் மாநிலமானது அத்தகைய பேரழிவில் இருந்து மீண்டு தம்மை புதுப்பித்து புதிய பலத்தோடு உள்ளார்ந்த சமூக வலிமையோடு எழுந்து நிற்கிறது. நிலநடுக்கத்தால் பெருமளவு அழிந்த பகுதி கட்ச் பிரதேசம். கட்ச் பிராந்தியத்தை மையமாகக் கொண்டே நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அதே கட்ச் பகுதி இப்போது வெகுவிரைவாக உருமாறி முதலீடுகளின் பிராந்தியமாக உருவெடுத்திருக்கிறது. கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து ரூ25 ஆயிரம் கோடி முதலீட்டை கட்ச் பிராந்தியம் பெற்றிருக்கிறது. இந்தியாவிலே மிகச் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக பூஜ் திகழ்கிறது. முந்த்ராவானது தனியார் துறைமுகத்தை பெற்றிருக்கிறது. இதனால் துறைமுகம்சார் தொழில்கள், அனல் மின்நிலைய மையமாக முந்த்ரா திகழ்கிறது.

சவால்களுக்குள் குஜராத் மாநிலம் தள்ளப்படுகிறபோது அந்த சவால்களையே சரியான சந்தர்ப்பங்களாக பயன்படுத்திக் கொள்கிறோம். ஒரு காலத்தில் வறண்டு கிடந்த மாநிலம் இது. ஆனால் இப்போதே நர்மதை ஆற்று நீர் பல மாவட்டங்களையும் வளப்படுத்தி பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் ரூ25 ஆயிரம் கோடி செலவில் உருவான சர்தார் சரோவர் திட்டத்துக்குதான் அத்தனை நன்றியும் உரித்தாகும்! இதனால் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே மிக அதிகபட்சமாக வேளாண் வளர்ச்சியானது 9 சதவீதத்துக்கும் மேலாக குஜராத்தில் இருக்கிறது.

பொருளாதார தாராளமயத்தின் விளைவுகளை இந்த நுற்றாண்டின் முதல் பத்தாண்டுகாலத்தில் குஜராத்தில் தான் காண முடியும். பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் இந்தியாவிலேயே குஜராத் மாநிலம்தான் வலுவாக திகழ்கிறது. குஜராத் மாநிலம் கடைபிடிக்கும் முதலீட்டுக்கான சூழல், தொழில்துறையினருக்கேற்ற கொள்கைகள்தான் இந்த மாநிலத்தை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக்கியிருக்கிறது.

ஏராளமான சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தியை அதிகரித்து இன்று முன்னணி மாநிலமாக குஜராத் திகழ்கிறது. மேலும் உலகத் தரம் வாய்ந்த மிகப் பெரிய சிறப்பு முதலீட்டு பிரதேசங்களையும் அமைத்து வருகிறது குஜராத். இந்த மையங்களில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

குஜராத்தின் இத்தகைய சாதனை என்பது வெறும் தொழில்சார் கொள்கையால் மட்டுமே அல்ல! கலாசார விழுமியங்களையும் முன்வைத்தும் கூட சாத்தியமானதுதான்! குஜராத் மாநிலமானது சுற்றுலா பயணிகளையும் யாத்ரீகர்களையும் பெருமளவில் ஈர்க்கக் கூடிய முதன்மை மாநிலமாக இருக்கிறது. 9 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் நாட்டிய திரு விழாவான நவராத்திரி இங்கு விமர்சையாக கொண்டாடப்படும். சர்வதேச பட்டத் திருவிழா ஆண்டு தோறும் ஜனவரி 14-ந் தேதி நடைபெறும். இதில் சர்வதேச அளவில் பட்டம் விடுவோர் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். குஜராத் மாநிலத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் மாநிலத்தில் சுற்றுலா தூதராக பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சான் நியமிக்கப்பட்டார். அத்துடன் கர்நாடகா, கோவா போன்ற இதர மாநிலங்களுடன் இணைந்து சுற்றுலா துறையை மேம்படுத்தி வருகிறோம்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service