ஒன்று திரள்வோம் இந்தியாவின் இரும்பு மனிதர் ‘சர்தார் வல்லபாய் படேல்’ நினைவு ‘ஒற்றுமைச் சிலை’ (Statue of Unity) உருவாக்கத்திற்கு! – திரு.நரேந்திர மோடி”

October-3-13

 

நர்மதை  ஆற்றின் கரையில், 182 மீட்டர்  உயரமுடைய உலகின்   மிக உயரமான இரும்பு மனிதர் ‘சர்தார் வல்லபாய் படேல்’ நினைவு ‘ஒற்றுமைச் சிலையை ‘  (Statue of Unity) அமைப்பதற்கான மிகப் பிரம்மாண்டமான  திட்டத்தை அக்-2010 அன்று நமது  நரேந்திர மோடி அவர்கள் நம்மிடையே  பகிர்ந்து கொண்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.


நவீன ஒருங்கிணைந்த இந்தியாவின் சிற்பி,  இரும்பு மனிதர் ‘சர்தார் வல்லபாய் படேல்’ அவர்களை பெருமைபடுத்தும் விதமாக அமைக்கப்படவிருக்கும்   ‘ஒற்றுமைச் சிலை’ உருவாக்கத்திற்கான தேசிய இயக்கத்தில் தேசியவாதிகள் அனைவரையும் பங்கெடுக்க  நமது நரேந்திர மோடி தற்போது அறைகூவல் விடுத்திருக்கிறார்.

தேசத்தை ஒன்றிணைக்கும் இந்த  பிரம்மாண்ட தேசிய இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொள்ள, ஆதரவு நல்க  (0)80009 80009 என்கிற எண்ணுக்கு அழைக்கவும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்விற்கு  இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களும் ஒரு துண்டு இரும்பையோ அல்லது உழவிற்கு பயன்படுத்தப்பட்ட கருவியின் ஒரு துண்டையோ  தங்கள் பங்களிப்பாக வழங்குமாறு வலியுறுத்தி இருக்கிறார். சர்தார் படேல் குஜராத் மண்ணின் மைந்தன் மட்டுமல்ல, சிதறிக்கிடந்த நமது தேசத்தை கட்டி எழுப்பி ஒன்றாக்கிய சிற்பி, ஒற்றுமையின் சின்னம். அவரை பெருமை படுத்தும் விதமாக உலகிலேயே மிக உயரமான ‘ஒற்றுமைச் சிலையை’  எமது  குஜராத் அரசு கட்டுகிறது என்பதை பகிர்ந்து கொண்டார்.

இந்த உயரிய முயற்சிக்கு இந்தியாவின் அனைத்து விவசாயிகளும் உதவிடுமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நீங்கள் கேட்கலாம் குஜராத்திடம் இல்லாத பணமா..ஏன் நம்மிடம் கேட்கிறார் என்று! வெறும் பணத்திற்காக நான் உங்களிடம் கேட்கவில்லை.  உணர்வுப்பூர்வமான இணைப்பிற்காக, ஒரு பந்தத்தை உருவாக்குவதற்காக  உங்களிடம் கேட்கிறேன்.  பல நூறு, ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் ஒரு பிணைப்பை நம்மிடையே  உருவாக்கும் சக்தி படைத்தது இது என்றும் அதற்கு ஏதோ ஒரு வகையில் நீங்கள் உதவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

 


சர்தார் படேல் ஒரு இரும்பு மனிதர், அவர் பெயரைப் போற்றும் விதமாக அமைக்கப் படவிருக்கும் ‘ஒற்றுமை சிலைக்கு’  இந்தியாவில் உள்ள  அனைத்து  கிராமத்திலிருந்தும் இரும்புத் துண்டுகள் வேண்டும் என்றும் அவ்விரும்புத்  துண்டுகள்  வேளாண் தொழிலில் பயன்படுத்தியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சர்தார்  ஜெயந்தி தினமான அக்-31 முதல் சன-26 வரை இந்தியாவின் மூலை  முடுக்கெல்லாம் சென்று தேவையான இரும்பை பெற இருப்பதாகவும் அதற்கு அனைவரின் ஒத்துழைப்பு தேவை என்றும் வேண்டியிருக்கிறார். இரும்பு மனிதரும் ஒரு விவசாயின் மகன் தான். அவரை பெருமைபடுத்தும் இந்த நிகழ்விற்கு தேவையான இரும்பானது  விவசாயத் தொழிலில் பயன்படுத்தப்பட்ட இரும்பாக இருந்தால்  அதை விட பெருமை ஏது !

 

நன்றி; தர்மராஜ் முரளிகிருஷ்ணன்


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service