எந்த வித எதிர்ப்பும் ஆர்ப்பட்டமும் இன்றி 7 புதிய மாவட்டங்கள் 23 புதிய தாலுகாக்காக்கள்”

September-9-13

கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறதா.. புதிய மாநிலத்தையோ, மாவட்டத்தையோ, நகரங்களையோ உருவாக்க ஒரு அரசு முற்படும் போது அதற்கான அரசியல் சார்ந்த எதிர்ப்புகள் ஏராளம். இன்றைய சூழலில் சாதி அரசியல் செய்து அதில் ஆதாயம் தேட நினைப்பவர்கள் மிக அதிகம். ஒரு புறம் தெலுங்கானா பிரச்சனை மறு புறம் புதிய மாநிலங்களுக்கான கோரிக்கை இப்படி பல்வேறு சிக்கல்கள் இருக்க எந்த வித ஆர்ப்பட்டமும் இன்றி புதிய 7 மாவட்டங்களை சுதந்திர தினத்தன்று அறிவித்ததோடு மட்டுமின்றி விநாயகர் சதுர்த்தி அன்று 23 புதிய தாலுகாக்களையும் அறிவித்திருக்கிறார்

நமது மோடி அவர்கள். இது தொடர்பான தகவலை குஜராத்தின் செய்தித் தொடர்பாளரும் நிதி அமைச்சருமான திரு.நித்தின் படேல் அவர்களும் அவரது சக அமைச்சர் திரு. சௌரப் படேல் அவர்களும் பகிர்ந்து கொண்டனர். ஏற்கனவே இருந்த மாவட்டங்களையும் தாலுகாக்களையும் சேர்த்து இப்போது முறையே 33 மற்றும் 248 ஆகக் கூடியுள்ளன. இவ்வாறு பிரித்ததின் சிறப்பம்சம் என்னவெனில் மாநில/மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாகவும் அதிகச் சுமையின்றி, மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை வேகமாகவும் எளிதாகவும் செயல்படுத்தவும் மிக உறுதுணையாக அமையும் என்று தெரிவித்தனர்.

அமைச்சரவை துணைக் குழுவின் பரிந்துரைகளின்படி (Cabinet Sub-Committee) இதற்கான திட்ட வரைவானது வருவாய்த்துறை அமைச்சர் திருமதி.ஆனந்திபென் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் குழுவால் (Council of Ministers )ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தப் புதிய பகுதிகளானது மக்களின் நலன் கருதியும் அவர்களின் எதிர்பார்ப்புகளை உடனடியாக பூர்த்தி செய்யும் பொருட்டும், நிர்வாக வசதிக்காகவும் அதன் வேலைப் பளுவை பகிர்ந்து கொள்ளும் பொருட்டும் பிரிக்கப்பட்டது என்று சொன்னால் அது மிகை அன்று. புதிதாகப் பிரிக்கப்பட்ட 23 தாலுகாக்களின் விபரம் பின்வருமாறு (எந்த இரண்டு மூன்று தாலுக்காக்ளில் இருந்து புதிய தாலுக்காக்கள் உருவாக்கப்பட்டது என்பது அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது ):

கிர்-கத்தா (உனா ),ஜூகனத் நகரம் (ஜூகனத்) ,லக்னி (தீசா,தாதர்,தாரட் ), ஜெசர்(மதுவா, கரியதார்,பலிடனா), கேர்கம் (சிக்லி), சங்கேஷ்வர் (சமி ), சரஸ்வதி(படான் ), வபி (பார்டி), வாகாய் (டாங்ஸ்) , சுபிர் ( டாங்ஸ்), ஜோடனா(காடி, மேசனா), நேற்றாங் (ஜகாடியா,வாலியா), சூகம் (வாவ்), தங்காத் (சோடிலா, முலி , சாயலா), தோலேரா (தந்துகா, பார்வலா ), விஞ்சியா (ஜாஸ்டான் ), கல்டேஷ்வர் (தாசரா), போடேலி (சங்கேதா, ஜெட்பூர், பவி ), போஷினா (கேத்ப்ரம்மா), சஞ்சேலி (சலோத் ), கோஜாரியா (மேசனா, விஜபூர், காடி, விஸ்நகர் ,மான்சா), வசோ (மடார், நடியாத்) மற்றும் தேசர் (சவ்லி )

இது போன்ற துணிச்சலான முடிவுகளை மக்களின், சமூகத்தின் முன்னேற்றத்தை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மக்களின் ஒப்புதலுடன் அவர்களின் பங்களிப்போடு மாநில முதல்வர் திரு.மோடி அவர்களும் அவரது மாநில நிர்வாகமும் குறைகளின்றி நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பது குஜராத்திற்குக் கிடைத்த பெருமை

 

நன்றி தமிழில்; தர்மராஜ் முரளிகிருஷ்ணன்


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service