“கிராம சுயாட்சி” இந்தியாவின் கடைக்கோடி கிராமமும் தன்னிறைவும், சுயாதிகாரமும் அடையச் செய்கின்ற “காந்தீயக் கனவு”. இந்தக் கனவின் பிரதிபலிப்பே ” பஞ்சாயத்து ராஜ்”,இந்தியக் குடியரசின் பயனைக் கடைக் குடிமகனுக்கும் இட்டுச்செல்லும் முக்கியத் தூண். “பஞ்சாயத்து ராஜ்”யத்துக்கு இணையாகக் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று “கிராம வளர்ச்சி”; இது நகர, மாநகர வளர்ச்சிகளிலிருந்து தனிமைப்படுத்தப்படாத ஒரு “கூட்டு வளர்ச்சி”யின் அங்கமாய்த் திகழ வேண்டும்.
உட்கட்டமைப்பு, சமூக, வாழ்வாதார முன்னேற்றத்தையும், கிராமம் சார்ந்த ஆட்சிமுறையையும் கொண்டதாயிருக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் கிராமப்புற மாற்றம் என்பது அபரிமிதமாக உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து, சீரிய முன்னேற்றத்தின் அஸ்திவாரமாக மாறி வருகிறது. 68% மக்களைக் கொண்ட கிராமங்கள் இந்திய வளர்ச்சியை, வருங்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாகவே உள்ளன. இச்சூழ்நிலையில், “கிராம சுயாட்சி” தத்துவம் முக்கியத்துவம் பெறுவதொடு, கிராமப்புற மக்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்குவது இன்றியமையாததாகிறது. நகரத்திற்கிணையான அத்துணை வசதிகளையும், கட்டமைப்புகளையும் ஏற்படுத்தித் தருவதும் அவசியமாகிறது
. குஜராத் மாநில அரசு, “கிராம சுயாட்சி”யின் பல்வேறு புதிய முயற்சிகளின் பிறப்பிடமாகத் திகழ்கிறது. சுய அதிகாரங்களுடன் கூடிய “மூன்றடுக்குப் பஞ்சாயத்து ராஜ்”யத்தை முறைப்படுத்தியதின் முன்னோடியாகத் திகழ்கிறது. கிராமப்புறப் பெண்களை வலிமைப் படுத்தி, தொழில் முனைவோராக்கி, மிகப்பெரும் கிராமப்புற மாற்றத்தினை ஏற்படுத்திய “மிசன் மங்களம்”திட்டம் குஜராத் அரசின் சமீபத்திய சாதனையாகும். உலகமயமாக்கலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பன்முனைத் தொடர்த் திட்டமிடலும், கற்றலும் மாறிவரும் கிராமப்புற சூழ்நிலைக்கும், திட்டமிடுவோருக்கும், கல்வியாளர்களுக்கும் இன்றியமையாததாகிறது. கிராமப்புற இந்தியா ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சியோடே , இன்றைய கிராமப்புறம் எதிர்கொள்ளும் சவால்கள், நடப்பு உலக நிலவரம்,
சிறந்த பயிற்சிமுறைகள், வெற்றிக் கதைகள், மற்றும் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ள மிகச் சிறந்த களமாக விளங்கப் போகிறது, இந்தக் கருத்தரங்கு. பஞ்சாயத்து, கிராம வீட்டுவசதி மற்றும் அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இணைந்து ஆக17,, 2013 மகாத்மா காந்தி மந்திர், காந்திநகரில் நடக்கும் மாநாட்டிற்கும், அதைத் தொடர்ந்து ஆக18 ல் நடக்கும் கள ஆய்வுக்கும் வருகை புரிந்து பயனடையுங்கள்.
மேதகு நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களை நேரடியாகக் கண்ணுற்று மொத்த தேசமும் பயனுற ஆவன செய்வீர்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.