உணவுப்பாதுகாப்பு சட்டம் குறித்து அனைத்துமாநில முதல்வர்களின் கூட்டத்தை நடத்தவேண்டும்”

August-13-13

உணவுப்பாதுகாப்பு சட்டம் குறித்து முழுமையான விவாதம் நடத்த அனைத்துமாநில முதல்வர்களின் கூட்டத்தை நடத்தவேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கடிதம் எழுதியிருக்கிறார்.
ஆகஸ்ட் 7ஆம் தேதியிட்ட கடிதத்தில் மோடி குறிப்பிட்டிருப்பதாவது

உணவுப் பாதுகாப்பு அவசரசட்டத்தின் மூலம் அடிப்படை நோக்கங்கள் நிறைவேற வில்லை. இதனால் ஏழைகளுக்கு உணவு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருக்கிறது.

நடைமுறைப்படுத்த இயலாதபொறுப்புகள் மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின்மீது சுமத்தப்பட்டுள்ளன. யார் பயன்பெறத் தகுதி யுடையவர்கள், பயன்பாட்டின் அளவு என்ன என்பதை குறிப்பிடாமல் பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாட்டின் வெவ்வேறுபகுதியில் இருப்பவர்களிடையேயான தேவைகளில் பெரும்வேறுபாடு இருக்க கூடும்.

பயன் பாட்டாளர்கள் யார் என்பதை மாநில அரசுகளுடன் கலந்தா லோசித்து முடிவுசெய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த ஜனவரிமாதமே குறிப்பிட்டிருந்தது.

சராசரியாக 5 நபர்கள்கொண்ட வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஒருகுடும்பம் மாதத்துக்கு 35 கிலோ உணவு பண்டங்களை பெறுவதற்கு பதிலாக 25 கிலோ மட்டுமேபெற இந்த சட்டம் வழிவகுக்கிறது.

யாருக்கு உணவுப்பாதுகாப்பு தேவைப்படுகிறதோ, அவர்களுக்கான உணவு அளவைக் குறைப்பது என்பது உணவு பாதுகாப்பு சட்டத்தின் நோக்கமாக இருக்கமுடியாது.

ஒருபுறம், வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக திட்டக்குழு கூறுகிறது. ஆனால் மறுபுறத்தில், மக்கள் தொகையில் மூன்றில் இரண்டுபங்கு மக்களுக்கு உணவு பாதுகாப்பு அளிப்பதாக இந்தசட்டம் கூறுகிறது. இதுபோன்ற முரண்பாடுகளை நீக்க அனைத்து மாநிலங்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்தவேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் ஆகிய இருதரப்புமே இந்த விஷயத்தில் பாதிக்கப்படக் கூடியவை. எனவே உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து விரிவாக விவாதிக்க அனைத்துமாநில முதல்வர்களின் கூட்டத்தை பிரதமர் கூட்டவேண்டும் என்று நரேந்திரமோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service