குஜராத் மாநில அரசு வேளாண்துறையில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியிருக்கிறது. நாட்டில் இரண்டாவது பசுமை புரட்சியை முன்னெடுத்திருக்கிறது. மாநில அரசின் வேளாண் கொள்கைகளால் விவசாயிகள் நல்ல வருவாய் ஈட்டும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் சராசரி வேளாண் வளர்ச்சியானது 3% என இருக்கும் நிலையில் குஜராத் மாநிலத்தின் வேளாண் வளர்ச்சியோ 10.97%ஆக இருக்கிறது.
2003ஆம் ஆண்டு விவசாயத்துக்கு மட்டும் தனியான மின்விநியோகப் பாதையை நரேந்திர மோடி உருவாக்கினார். அதுதான் இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திட்டது. எந்த ஒரு தடையுமே இல்லாமல் குறைந்தபட்சம் 4 மணிநேரமாவது தொடர்ச்சியாக சீரான மும்முனை மின்சாரத்தை இரவு நேரத்தில் வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார். தமது சிந்தனையை விவசாயிகளிடம் அவர் பகிர்ந்து கொண்டார். இதை அவர்களும் ஏற்றுக் கொண்டு மின்சார மோட்டார்களை இயக்கினர் .இதன் மூலம் டீசலுக்கு அவர்கள் செலவிடும் தொகை மிச்சமானது. இதனால் இரண்டாவது பசுமை புரட்சியானது சாத்தியமானது. குஜராத் ஆண்டுதோறும் கிரிஷி மகோத்சவ்வை கொண்டாடுகிறது!
வீடியோ :
குஜராத் மாநிலம்தான் மண்வள அட்டைகளை ஒவ்வொரு விவசாயிகளுக்கும் வழங்கியிருக்கிற முதல் மாநிலம். இதன் மூலம் ஒன்றிரண்டு தானியங்களை விதைத்துக் கொண்டிருந்த விவசாயிகள் தற்போது 3-4 தானியங்களை பயிரிட்டு கூடுதல் லாபம் அடைகின்றனர். குத்தகை விவசாய முறை, மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்ட வசதிகளால் முன்னைவிட விவசாயிகள் இருமடங்கு வருவாய் ஈட்டுகின்றனர்.,
வேளாண் வளர்ச்சிக்கு மற்றொரு காரணம் நீர்வளம். நீர் சேமிப்பில் குஜராத் வரலாற்று சாதனை படைத்துள்ளது. நீலப் புரட்சி என்ற பெயரில் ஏராளமான தடுப்பு அணைகள், குளங்கள் கட்டப்பட்டுள்ளன. உலகிலேயே மிகப் பெரிய நீர்ப்பாசன திட்டமான சர்தார் சரோவர் திட்ட, நர்மதை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. 90 மீட்டரில் இருந்து 121.9 மீட்டராக அதன் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாசனத்துக்கும், மின் தயாரிப்புக்கும் குடிநீர் விநியோகத்துக்கும் மிகப் பெரும் பங்களிப்பை இது செய்து வருகிறது.
குஜராத் மாநிலம் வேளாண் துறையில் ஒரு முன்மாதிரி மாநிலம். கடந்த 7 ஆண்டுகளில் விவசாயத்துறையில் வருமானதும் ரூ14 ஆயிரத்தில் இருந்து ரூ59 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் முதலீட்டாளர்களை ஈர்க்கும் 2011ஆம் ஆண்டு மாநாட்டில் வேளாண் துறை சார் தொழில்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பாக ரூ37 ஆயிரம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன.
குஜராத்தின் வேளாண்வளர்ச்சி பற்றி கூடுதலாக அறிந்து கொள்ள
வீடியோ இணைப்புகள் :
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.