மோடி போட்டியிட்ட மணிநகர் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட காங்கிரசில் ஒரு ஆம்பிளை கூட முன் வரவில்லை என்பது வெட்கக்கேடானது .சஸ்பென்ட் செய்யப்பட்ட ஐ .பி .எஸ் .அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி சுவேதாவை களத்தில் இறக்கினார்கள். ஐயோ பாவம் அந்த அம்மையார் .மோடியிடம் 86,373 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் .
மகாத்மா கந்திஜியின் வாரிசுகள் நாங்கள் தாங்கள் தான் என்று ஜம்பம் அடித்தவர்கள் ,காந்திஜி பிறந்த போர்பந்தர் தொகுதியிலேயே ,குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத் வாடியா போட்டியிட்டு மண்ணைக் கவ்வினார் .
கோத்திர கலவரத்திற்கு பிறகு கடந்த 10 ஆண்டு காலமாக குஜராத்தில் மதக்கலவரங்கள் நடைபெறவில்லை .எனவே மோடி முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற பிரச்சா ரத்தை புறக்கணித்துவிட்டு முஸ்லிம்களும் பெருமளவில் மோடிக்கு வாக்களித்து உள்ளனர்.
கேசுபாய் படேல் தனிக்கட்சி துவங்கியவுடன் ‘அவ்வளவுதான் …படேல் சமுதாய ஓட்டெல்லாம் போச்சு …’என்றெல்லம் ஊடகங்கள் செய்திகளை வெயிளிட்டனர். ஆனால் குஜராத் மக்கள் ஜாதி அரசியலுக்கு சாவுமணி அடித்து விட்டனர் .
மோடி வெற்றிபெற்ற உடனேயே தன்னை எதித்து தனிக்கட்சி துவங்கி போட்டி போட்ட கேசுபாய் படேல் வீட்டுக்குச் சென்று , அவரிடம் ஆசி பெற்று , அவருக்கு இனிப்பு வழங்கியது மோடியின் பெருந்தன்மையைக் காட்டுகிறது .
சாராயம் இல்லை …. பிரியாணி இல்லை … ஓட்டுக்குப் பணம் இல்லை …. பொய்யான வாக்குறுதிகள் இல்லை ….ஜாதி இல்லை …மதம் இல்லை .. இந்த வகையறாக்கள் எதுவுமே இல்லாமல் மோடி எப்படி வற்றி பெற்றார் என்பது அரசியல் தலைவர்களுக்கு ஒரு புரியாத புதிர்ராகத்தான் இருக்கும் .எது எப்படியோ இன்று குஜராத் ….. நாளை டெல்லி என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கத் துவக்கி விட்டது .
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.