இன்னாரைப் போன்று உருவாகவேண்டும் என எண்ணியதே இல்லை”

March-17-13

இன்னாரைப் போன்று உருவாகவேண்டும் என நான் என் வாழ்க்கையில் இதுவரைக்கும் எண்ணியதே இல்லை . ஏதாவது செய்யவேண்டும் என முயற்சித்துள்ளேன் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமராகும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த நரேந்திர மோடி கூறியதாவது:-

பெரும்பாலும், யாரைப் போலாவது, ஆகி, இறப்பதையே மக்கள் விரும்புவார்கள். இதை நான்பின்பற்றியதே இல்லை . குஜராத் முதல்வராக பதவி ஏற்கும்வரை இதை பற்றி நான் கனவிலும் எண்ணியதில்லை. நான் முதல்வர் ஆவேனா? என்று எந்த ஜோசியரையும் சந்தித்து ஆரூடம் கேட்ட தில்லை.

ஒருவரைப் போன்று ஆவதற்கு நாம் கனவு காணக்கூடாது. செய்வதைப்பற்றி சிந்திக்க வேண்டும். குஜராத்தின் ஆட்சி நல்லமுன்மாதிரி என்றால், இது நாடுமுழுவதும் நடைமுறைப் படுத்த தகுந்ததுதான். இதற்காக நான் அங்கு போகவேண்டும் என்பதில்லை.

ஊழலை ஒழித்து நல்லாட்சியை வழங்கவேண்டும் என்பதே எனது குறிகோள். தொழில்நுட்ப புரட்சியின் மூலம் வறுமையை ஒழிக்கமுடியும் என்றார் .

 


  • நேரலை

    Stay Tuned For Live Events

  • நிர்வாகம்

  • செய்திகள்

    மோடியின் டாக் ...

    நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

    காணொளி

  • கட்டுரைகள்

  • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service