இந்த அலை கோபமுற்ற, அதேசமயம் நம்பிக்கை உள்ளவர்களின் எழுச்சியாகும்”

February-21-14

கடந்த வார இறுதியில் நரேந்திர மோதியும் பாஜகவும் மிகவும் மும்முரமாக இருந்தனர். சனிக்கிழமை, அவர் இம்பாலிலும், குவஹாத்தியிலும், கடைசியாக சென்னையிலும், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். ஞாயிறன்று, தொடக்க நிகழ்ச்சியாக சென்னைக் கல்வி நிறுவனத்திலும், பின்னர் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சிகளில் குறிப்பிடவேண்டிய அம்சம், நரேந்திர மோதிக்கு இதற்க்கு முன் இல்லாத மக்களின் பங்களிப்பாகும். இம்பால் பேரணி, மணிப்பூரிலேயே பெரிய அரசியல் பேரணியாக கருத்தப்படுகிறது. மணிப்பூரில், பாஜகவுக்கு வலுவான அமைப்பு இல்லை. அதையும் மீறி முன்னெப்போதும் இல்லாத கூட்டத்தை மோதியால் கவர முடிந்ததென்றால், அது மக்களின் தற்போதைய மனநிலையையே குறிக்கிறது. மேலும் அவர் குவஹாத்தி, சென்னை மற்றும் கேரளாவில் நடந்த கட்சிப் பொதுக் கூட்டங்களிலும் திரளான மக்கள் கூட்டத்தை கவர்ந்திழுத்தார். அவருடைய மற்ற நிகழ்ச்சிகள் மத மற்றும் ஜாதிய பிளவையும் மீறி நடந்தன. பாஜகவை கடந்த காலங்களில் அவ்வளவாக ஆதரிக்காத சமூகத்தினர் கூட, இம்முறை தங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உற்சாகத்துடன் அவரை அழைத்தனர். அவர்களுடைய அந்த ஆதரவு, பேராதரவாக இருந்தது.

தற்போதைய மனநிலை காங்கிரஸின் உண்மைநிலையை தெரிவிக்கிறது. மக்கள் நம்பிக்கையை பார்க்கின்றனர். ஆத்திரமடைந்துள்ள எல்லா மக்களும், தங்கள் குறியீடாக மோதியை பார்க்கின்றனரா? மக்களுக்கு வேண்டியது, உயர்ந்த, முடிவெடுக்கக்கூடிய, கவரும் தலைவர். மக்கள் நேர்மையின் அளவுகோளை மறுமதிப்பீடு செய்யவிரும்புகின்றனரோ? உயரும் விலைவாசி, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார தேக்கம் போன்றவை அவர்களை பாதிக்கிறது. பாஜகவின் பாரம்பரிய பலமுள்ள வட, மத்திய, மேற்கு மாநிலங்களில், மோதிக்கு முன்னெப்போதுமில்லாத கூட்டம் கூடுவது புரிந்துகொள்ளக்கூடியதே!

ஆனால் பாஜகவிற்கு பாரம்பரிய பலமற்ற பகுதிகளிலும் முன்னெப்போதுமில்லாத கூட்டம் கூடுவது எதைக்குறிக்கிறது? தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம், மேற்கு வங்காளம், மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் முன்னெப்போதுமில்லாத எண்ணிக்கையில் கூட்டம் கூடுவதுடன், மக்களிடம் ஒரு பளிச்சிடும் வரவேற்பு தென்படுவது எதனால்? இந்தப்போக்கு இதற்கு மேலும் எதையாவது குறிக்கிறதோ?

சாதாரண காலங்களில் இத்தகைய மிகப்பெரிய மக்கள் கூட்டம் வெளிப்படையாக தெரியாதே? இவை வலுவான அலை  உருவாவதை குறிக்கிறது. இந்த அலை கோபமுற்ற, அதேசமயம் நம்பிக்கை உள்ளவர்களின் எழுச்சியாகும். தற்போதய நிலை மக்களை கோபமுறச் செய்துள்ளது. அவர்களுக்கு மாற்றம் தேவை. மாற்றத்திற்கும், மாற்றத்திற்கான நம்பிக்கைக்கும், சிறந்தவராக மோடியை கருதுகிறார்கள். மோதியின் பின்னுள்ள அரசியல் ஆதரவுதளம், வரவிருக்கும் தேர்தலை மோதி மீதான பொது ஜன வாக்கெடுப்பாகவே மாற்றிக்காட்ட வேண்டும். இந்த உள்ளலையானது பாராளுமன்றத்தில் எண்ணிக்கைகளாக உருமாற்றம் பெரும். சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் இந்த ஆதரவு, மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் பாஜகவிற்கு உள்ள ஆதரவைக்காட்டிலும் அதிகம். இந்த மாநிலங்களில் நாம், இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்கலாமோ?

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service