இந்திய மண் பற்றே இந்து தர்மம் சார்ந்தது தான்”

September-6-13

 இந்தியக் கலாச்சாரத்து மண்ணில் பிறந்த என் வம்சாவளிகள் பலர் ஏதோ காரண காரியங்களால் மேற்கத்திய பிற மதங்கள் சென்று இந்து தர்மத்தை கைவிட வேண்டிய சூழலுக்கு எத்தனையோ புறக் காரணங்கள் இருக்கலாம். .ஆனால் இந்து தர்மத்தை ஒரு நிமிடம் சிந்தித்தால் அகக் காரணங்கள் எல்லாம் உணர்ந்து ஒன்றாகிவிடுவோம்.”
இந்திய மண் பற்றே இந்து தர்மம் சார்ந்தது தான்.இந்து என்றாலே பலபேர் ஒரு மதம் அல்லது மார்க்கம் என்ற பெயரில் ஒரு எல்லை வகுத்து தனிமைப் படுத்த முயல்கிறார்கள். ஜீவன் என்ற மனிதனில் எல்லையோடு இயங்கும் போது ”ஜீவாத்மா” என்றழைப்பதும், அதுவே எல்லையற்று இயங்கும் போது ”பரமாத்மா”என்றழைப்பதுமாகா இந்து தர்மம் இறைத் தத்துவத்தை மிகத் தெளிவாக்குகிறது.

பஞ்சபூதங்கள் ஐந்தறிவாகவும்,மனம் என்ற ஆறாவது அறிவின் வெளிப்பாடாக காந்தத் தத்துவத்தையும்,பிரம்மஞானத்தின் அதாவது இறைவன் யார்? என்ற விளக்கம், ”கட”உள் என்ற வார்த்தையால் உணர்த்தி மனிதனுக்கும்,இறைவனுக்குமான இடைவெளி யை குறைக்கும் பக்குவத்தையும்,பயிற்சியையும் அளிக்கும் இயற்கை வாழ்வியல் கூடமே இந்துத் தத்துவங்கள் அடங்கிய கோயில்கள்,வழிபாட்டுத் தளங்கள்.

”நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து மந்திரங்கள் முனுமுனுப்பதேனடா?
நட்ட கல்லும் பேசுமோ?நாதன் உள்ளிருக்கையில்”

இப்படி சித்தர் சிவவாக்கியர் சுதந்திரமாகப் பாடிய அந்த தெய்வத்தின் சுயம்புவை இந்து தர்மம் உணராமல் அல்லது தெரியாமல் இல்லை.
இறைவன் அல்லது இயற்கை அல்லது கடவுள் என்று எல்லாம் வல்ல பேராற்றலின் மீது கொண்ட அன்பால் உருவான பல நாமங்கள் எல்லாமுமே ”செயலுக்கு விளைவு” என்ற இயற்கை நியதியை உணர்த்தவல்லது. கீதை உபதேசம் உள்ளிட்ட புராணங்கள், இதிகாசங்கள், திருவிளையாடல்கள் தெய்வத்தின் பல பெயர்கள் இந்து தர்மத்தின் சாகாவரம் பெற்ற சத்தியங்கள்.

விஞ்ஞான பூர்வமானவை என்றால் அதற்கும் பொருந்தும்,உளவியல் ரீதியானவை என்றால் அதற்கும் பொருந்தும்,பிரம்மத்தை உணரும் பக்குவமில்லாதவருக்கு என்றால் அதற்கும் பொருந்தும். இப்படி எல்லாக் காலத்திற்கும்,எல்லோருக்கும் பொருந்தும் இந்து தர்மத்தை அதுவும் முக்காலமும் தியானித்து இறைவனை உணரும் தட்ப வெட்பத்தையும், ஞானத்தையும்,ஞாலத்தையும் ஒருங்கிணைக்கும் இறைத்தத்துவதையும் ஒருங்கே பெற்ற நாடு இந்தியா அதன் இந்து தர்மம்.எனவே இதை உணர்ந்த இந்த வழி வந்த யாரும் ”மதவாதிகள்” என்றால் என்னைப் பொறுத்தவரை அதற்காக பெருமைப்படுகிறேன்.

நரேந்திரமோடி இந்து தர்மத்தை நேசிக்கிறார் என்பதாலே பலபேருக்கு தீட்டு வந்துவிடுகிறது. நரேந்திரனாக இருந்து சுவாமி விவேகானந்தர் என்று அடையாளப்பட்ட அந்த மாமனிதர் கண்ட கனவு நரேந்திர மோடி என்ற மாமனிதரால் நிறைவேறும் தருணம் நெருங்கி விட்டது. மோடி வருகையால் சில மோசடி மனிதர்கள் வேண்டுமானால் பயப்படலாம். ஆனால் இந்திய தேசமே பதறுகிறது பயத்தால் அல்ல.மரியாதையால். இந்துக்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல.யாரும் இந்துக்களின் எதிரிகளலுமல்ல.

எல்லோரையும் வாழவைப்பதே இந்து தர்மத்தின் நோக்கம்.இந்து தர்மத்தை நிலை நிறுத்துவோம்” மேற்கத்திய பிற மதம் சென்ற வம்சாவழியே தாய் மதத்திற்கு திரும்புவீர்” உண்மை இந்திய வரலாறு நிலைக்கட்டும். தேசப் பற்றும் தெய்வீகப் பற்றும் உள்ளவரே இந்த நாட்டை ஆளவேண்டும்.எல்லோரும் வாழவேண்டும்.”மதவாதம்”என்பதை சொல்லி மாமனிதர்களை கொச்சைப் படுத்தும் எவராலும் மோடி யை போல ஒருவருக்கும் உத்தரவாதம் தரமுடியாது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service