பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
9 கட்ட தேர்தலில் இதுவரை 438 தொகுதிகளில் 7 கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்த தொகுதிகள் அடங்கிய மாநிலங்களில் நரேந்திர மோடி பிரசாரம் செய்து ஆதரவு திரட்டியுள்ளார்.
மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15–ந் தேதி அரியானா மாநிலம் ரேவாரியில் முதலாவது பிரசார கூட்டத்தில் பேசினார்.
இதுவரை மோடி 25 மாநிலங்களில் 3½ லட்சம் கி.மீ தூரம் பயணம் செய்து 437 பொதுக்கூட்டங்களில் பேசி சாதனை படைத்துள்ளார். இன்னும் அவர் மே 10–ந் தேதி மாலை வரை பீகாரில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதன் மூலம் கிட்டத்தட்ட 450 பொதுக்கூட்டங்களில் பேசி சாதனை படைக்க உள்ளார். இது இந்திய தேர்தல் வரலாற்றில் எந்த தலைவரும் நிகழ்த்தாத சாதனை
இது தவிர, 1,350 பொதுக்கூட்டங்களில் 3டி தொழில் நுட்ப உதவியுடன் பிரசாரம் செய்துள்ளார். இதே தொழில் நுட்பம் மூலம் மேலும் 600 பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
மேலும் மோடி பங்கேற்கும் ‘டீயுடன் விவாதம்’ என்ற வீடியோ கான்பரன்சிங் ஆலோசனை கூட்டங்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சுமார் 4000 மையங்களில் நடத்தப்பட்டுள்ளன.
மோடி போட்டியிடும் வதோதரா, வாரணாசி தொகுதிகளில் மட்டும் அவர் 196 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார். சாலையோர பிரசார பேரணிகளும் நடைபெற்றுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிகபட்சமாக 4 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.