இந்தியாவை உருமாற்றுவதற்கான வேளாண்மை உருமாற்றம்”

September-16-13

கடன் வழங்கல் விவசாயியையும் பயிர்களையும் மையமாகக் கொண்டதாகவே இருக்க வேண்டும். தலைசிறந்த மாநிலமாம் குஜராத் வடிவமைத்த மாதிரி வளர்ச்சித் திட்டத்தின் முக்கியமான தூண்களில் ஒன்றாக இடம்பெற்றது விவசாயம் ஆகும். இந்த வளர்ச்சி திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் திறம்படச் செயலாற்றி வரும் குஜராத் அரசாங்கத்தின் உறுதிவாய்ந்த தொடர் உந்துதலினால் ஏற்பட்ட விளைவாகும்.

இம்மாநிலம் விவசாயத்தில் வியக்கத்தக்க அளவான 10% வளர்ச்சியை கடந்த 10 வருடங்களில் அடைந்துள்ளது. முதல் குஜராத் வேளாண் தொழில்நுட்ப உலகளாவிய உச்சி மாநாட்டை ஏற்று நடத்துவதன் வழியாகக் குஜராத் மாநிலம் விவசாயச் சமூகத்தைக் கட்டிக்காப்பதற்கு மிகுந்த அக்கறை காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், அச்சமூகம் விவசாயத்தின் மேல் கொண்டுள்ள உன்னத ஆர்வத்தை நீடிக்கச் செய்யவும் வழிவகுக்கிறது. அதன்மூலம் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கு உரிய அவசியத் தேவைகளை முற்றிலும் நன்கு அறிந்து செயல்படுகிறது என்னும் தகவலை உறுதிபட வெளிப்படுத்தியுள்ளது. .திரு நரேந்திர மோடி கோடிட்டுக் காட்டியபடி, கிடைக்கப்பெறும் அண்மைய நவீன தொழில்நுட்பத்தை இந்திய விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதோடு அவற்றின் பயன்பாடு பற்றி அவர்கள் அறிந்துகொள்ளவும் உதவுவதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கமாகும்.

அவருடைய இக் கருத்து, எப்படித் தொழில்நுட்பத்தை விவசாயத்தோடு ஒருங்கிணைப்பது என்பதைப் புரிந்துகொள்வதற்காகப் பல விவசாயிகள் இங்கிருந்து இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றனர் என்ற உண்மையிலிருந்து பிறந்ததாகும். திரு மோடி அவர்கள் தீர்வாகக் கூறவிருப்பது என்ன என்று அடிக்கடிக் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. மேலும், இந்திய நாடே திரு மோடி அவர்கள் ஒரு குறிப்பிட்ட துறையைப் பற்றி என்ன கூறுகிறார் என்பதைக் கேட்பதற்கு ஆவலுடன் முன்வருகிறது எனில் அது விவசாயத் துறையே ஆகும். விவசாய துறையில் உள்ளது . துடிப்பான குஜராத் வேளாண் தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் தொடக்க விழா, உலகம் விவசாயத்தை உருமாற்றுவதற்கான அவரின் லட்சியத்தை இந்த உலகமே கண்ணோட்டமிடுவதை வெளிப்படுத்தியுள்ளது.

கடன் வழங்கல் விவசாயி மற்றும் பயிர்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்

கடன் வழங்கல் விவசாயியையும் பயிர்களையும் மையமாகக் கொண்டதாகவே இருக்க வேண்டும். விவசாயி தற்கொலை செய்துகொள்வது இன்று இந்தியாவின் பயிர்த்தொழில் தொடர்பான துயரங்களில் தீவிரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கடன் தொல்லை என்பது விவசாயி தற்கொலைக்கு ஆளாவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாகும். குஜராத் முதல் அமைச்சர், அவரது தொடக்க உரையில் கடன் தொல்லையைத் தீர்க்கும் நோக்கில் ஒரு தீர்வு காண வேண்டியது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினார். அது தொடர்பாக, வங்கிகள் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் மற்றும் தனியார்கள் கடன் வழங்குவதில் உள்ள பங்கினைக் குறைப்பது அவசியம் என்றும் கூறினார். அத்துடன் விவசாயிகள் தனியாரிடம் இருந்து பெற்ற கடன்களைத் திரும்பச் செலுத்தச் சிரமப்படும்போது தனியார் அவ்விவசாயிகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறார்கள். மேலும் திரு மோடி கருத்துரைக்கையில், வங்கிகள் ஒருங்கிணைந்த வழிமுறையின்படி இரண்டு அம்சங்களைக் கருத்திற்கொண்டு கடன் வழங்க வேண்டும் என்று விளக்கினார். அதன்படி, கடன் வழங்கல் விவசாயியையும் பயிரிடப்படும் பயிர்களையும் மட்டுமே மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும். விவசாயிகளுக்குக் கடன் வழங்கும்போது மேற்கூறப்பட்ட இரண்டு அம்சங்களை நிச்சயமாக நினைவிற்கொள்ளப்பட வேண்டும்.

ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித்திறனுக்குரிய அதிகப்படியான உந்துதல்

திரு மோடியின் கருத்துப்படி, ஆராய்ச்சி மூலம் ஒரு ஹெக்டேர் நிலத்திற்கான உற்பத்தித்திறனைக் கூட்டுதல், தானியங்களில் உள்ள புரதச் (புரோட்டின்) சத்தின் அளவை அதிகப்படுத்துதல், நில வரைபடத்தை உருவாக்குதல் போன்றவை கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியப் பகுதிகளாக எழுந்துள்ளன. ஆராய்ச்சி போதுமான அளவு நடைபெறாமல் இருப்பதால், விவசாயப் பல்கலைக்கழகங்கள் மேற்கூறிய கருத்துகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என அவர் விளக்கியுள்ளார். தானியங்களில் புரதச் சத்தைக்கூட்டுவது ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு மாபெரும் தீர்வாக இருக்கும் என்று குஜராத் முதல் அமைச்சர் திரு நரேந்திர மோடி கருத்துரைத்துள்ளார்.

உற்பத்தி பற்றி திரு மோடியால் வெளிக்கொணரப்பட்ட ஒப்பீட்டு ஆய்வு, இந்திய எவ்வாறு வளரும் நாடுகளுக்கிடையே கூட உற்பத்தியில் பின்தங்கி உள்ளது என்பதை வெளிக்காட்டியுள்ளது. மேலும் அவர், இந்தியா ஒரு ஹெக்டேர் நிலத்தில் 2.8 டன் மட்டுமே கோதுமையை உற்பத்தி செய்யும்போது நெதர்லாந்து நாடு அதே ஒரு ஹெக்டேர் நிலத்தில் 8.9 டன் கோதுமையை உற்பத்தி செய்கிறது என்று எடுத்துக்கூறியுள்ளார். கரும்பைப் பொருத்தவரை, இந்தியா ஒரு ஹெக்டேரில் 66 டன் அளவு உற்பத்தி மட்டுமே செய்கின்றபோது பெரு என்னும் நாடு அதே ஒரு ஹெக்டேர் நிலத்தில் 125 டன் அளவு உற்பத்தி செய்கிறது. வாழைப்பழ உற்பத்தியில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் இந்தியா 38 டன் மட்டுமே உற்பத்தி செய்கிறது. ஆனால் அதே சமயத்தில் இந்தோனேஷியா அதே ஒரு ஹெக்டேர் அளவுள்ள நிலத்தில் 60 டன் அளவு வாழைப்பழத்தை உற்பத்தி செய்கிறது. அத்துடன் நம் இந்தியா ஒரு ஹெக்டேர் நிலத்தில் வெறும் 17 டன் அளவு வெங்காயத்தை மட்டுமே உற்பத்தி செய்கின்றபோது அயர்லாந்து 67 டன் அளவு வெங்காயத்தை உற்பத்தி செய்கிறது என்று விரிவாக விளக்கிக் காட்டியுள்ளார் திரு மோடி.

பயிற்சிக்கான அவசியம்

குஜராத் தன் பழங்குடி விவசாயிகளைப் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குப் பயிற்சிக்காக அனுப்புகிறது. ஆதலால் அப்பழங்குடி மக்கள் தங்கள் விவசாயத்தில் உற்பத்தித்திறனில் மேம்பாடு அடைந்தமையைப் பலனாகப் பெற்றதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார். இதை ஒரு கருவியாகக் கொண்டு, உற்பத்தித் திறனைப் பெருக்குவதற்குத் தேவையான தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவது அவசயமாகும். எனவே அதற்குரிய பயிற்சிகளை மக்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என திரு மோடி கூறியுள்ளார்.

விவசாயிகளை வாழ்வு பெறச் செய்வோம்

ஒரு காலத்தில் விவசாயத்துறை மட்டும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 51% அளவு பங்களிப்புச் செய்துள்ளது. ஆனால் அதே விவசாயத்துறை இப்போது வெறும் 14% அளவே பங்களிப்புச் செய்கிறது என்று குஜராத் முதல் அமைச்சர் திரு நரேந்திரமோடி குற்றஞ்சாட்டியுள்ளார். விவசாயிகள் படும் துயரம்

அதிகரித்துக்கொண்டிருப்பதால் அவர்கள் விவசாயத்தையே கைவிட்டுச் செல்வது இன்று எல்லோருக்கும் தெரிந்த உண்மையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 2500 விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுச் செல்லும் அவலநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. திரு மோடி அவர்கள் விவசாயிகளின் இந்த வெளியேற்றத்தைத் தடுத்த நிறுத்தி அவர்கள் தங்கள் வாழ்வினைப் பெறச் செய்வது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

திரு மோடி அவர்கள் தனது பங்காக எளிமையான அதே சமயம் பயன்தரக்கூடிய சிறந்த தீர்வைத் தந்துள்ளார். மேலும் அவர், இன்று சந்தைகளில் கிடைக்கப்பெறும் கார்பனேட் கலக்கப்பட்ட குளிர்பானங்களில் 5% இயற்கைப் பழச்சாற்றைச் சேர்த்தால் விவசாயச் சமூகம் மிகப்பெரிய அளவில் பயன்பெறும் என்று விளக்கிக் கூறியுள்ளார். ஆனால், திரு மோடி அவர்கள் இந்தப் பரிந்துரையை வழங்கியபோதிலும், பன்னாட்டு நிறுவனங்கள் மறுமுனையிலிருந்து உருவாக்கும் மிகப்பெரிய சவால்கள் எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயற்கை விவசாயம்- முன்னேற்றத்தின் பாதை

திரு மோடி அவர்கள் பிரதமர் திரு மன்மோகன் சிங்கிடம் இந்தியா முழுவதும் 500 நகரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டம், கழிவு நீர் சுத்திகரிப்பு முறை மற்றும் இயற்கை உர உற்பத்தி போன்றவற்றைச் செயல்படுத்தலாம் எனப் பரிந்துரைத்தைப் பற்றியும் கூறியுள்ளார். மேலும் இம்முறை காய்கறி உற்பத்திக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் நம்பினார்.

ஆனால் துரதிருஷ்டவசமாகப் பிரதமரிடமிருந்து இதுவரை திரு மோடிக்கு எந்தவிதப் பதிலும் வரவில்லை. குஜராத் தன் மாநிலத்தில் உள்ள 50 நகரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் நாட்டிற்கே முன்னோடியாக, மேற்கூறப்பட்ட மாதிரித் திட்டத்தைச் செயற்படுத்தி அதன்மூலம் கிடைக்கும் பலன்களையும் அணுக்கமாக உற்றுநோக்கி வருகிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.

இயற்கை விவசாயத்தின் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது மற்றும் சந்தையைத் தட்டியெழுப்பும் மகத்தான ஆற்றலும் அதற்கு உள்ளது. இதனைத் தெரிவிப்பதன் மூலமாக திரு மோடி அவர்கள், இந்தியா விவசாயத்துறை தொடர்பானவற்றை ஏற்றுமதி செய்யத் தொடங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு செய்வது ஒவ்வொரு மாநிலத்தையும் விவசாயம் தொடர்பான ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கைகளைப் பெற்றிருக்க வழிவகுக்கும். அது உலகளவில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் இயற்கையில் அறிவியல்பூர்வமானதாகவும் இருக்கும் என்று உலக அளவிலான விவசாயத் தீர்வை முன்வைத்திருக்கிறார் முன்னோடி மாநில முதல்வர் திரு நரேந்திர மோடி அவர்கள்.

நன்றி தமிழில் ; வீரமணி நம்பி


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service