மாற்றத்துக்கான புயல் மையம் கொண்டிருப்ப தாலேயே பாய்லின் புயல் இங்கே நீடித்திருக்க வில்லை”

October-18-13

இந்தியாவில் மாற்றத்துக்கான புயல் மையம் கொண்டிருப்பதாலேயே பாய்லின்புயல் இங்கே நீடித்திருக்கவில்லை என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். சென்னை வருகைதந்த மோடிக்கு விமான நிலையத்தில் 30000க்கும் அதிகமான பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்ப்பு தந்தனர்

அப்போது அவர் பேசியதாவது , இன்று இந்த உலகமே நம்மைப்பார்த்து நகைக்கிறது. யாரோ ஒருவர் கனவுகண்டனாராம். அவர் சொன்னபடி ஆயிரம்டன் தங்கம் இருப்பதாக நம்பி அதை தேடிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. இந்த ஆயிரம் டன் தங்கத்தை விட பல்லாயிரம் கோடி கறுப்புப்பணம் சுவிஸ் வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது.

Photo

Shri Modi receives a rousing welcome at the Chennai Airport

அதை முதலில் மீட்கட்டும் மத்தியஅரசு. இந்தியாவில் மாற்றத்துக்கான புயல் மையம் கொண்டிருக்கிறது: அண்மையில் இந்தியாவை பாய்லின்புயல் தாக்கியது. ஆனால் அந்த புயல் இங்கே நீடித்து நிலைக்கவில்லை. ஏனெனில் இந்தியாவிலேயே மற்றொருபுயல்.. மாற்றத்துக்கான புயல் மையம்கொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் மாற்றத்துக்கான சூறாவளி அலை வீசிக்கொண்டிருக்கிறது. அதை தமிழ்நாட்டிலும் நான் காண்கிறேன். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் நிச்சயம் தமிழகத்தின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். தமிழகத்தின் கனவுகள் பா.ஜ.க.,வின் கனவுகள். திருச்சியில் மிகப்பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை நடத்தினோம். மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இதற்கு காரணம் தமிழக மக்களும் பாஜக தொண்டர்களும்தான். உங்கள் அனைவருக்கும் நன்றி கூறவே நான் இங்கு மீண்டும்வந்துள்ளேன். காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்குவதற்காக பாஜக தொண்டர்கள் பாடுபடவேண்டும் என்றார் மோடி.

Shri Modi receives a rousing welcome at the Chennai Airport

Shri Modi receives a rousing welcome at the Chennai Airport
Shri Modi receives a rousing welcome at the Chennai Airport

Shri Modi receives a rousing welcome at the Chennai Airport

Shri Modi receives a rousing welcome at the Chennai Airport


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service