இந்தியாவிற்கு நல்ல காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது”

January-10-14

டில்லியில், 12வது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு, நேற்று முன்தினம் துவங்கியது. இதில் கலந்து கொண்டு குஜராத்  முதல்வர், நரேந்திர மோடி பேசியதாவது : வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற உடனே, நமக்கு, அவர்கள், டாலர்களாகவும் பவுண்டுகளாகவும் கொண்டு வந்து குவித்து விடுவர் என்ற நினைப்பு தான், மேலோங்கி நிற்கிறது.

நம் இந்திய சகோதர, சகோதரிகளை, டாலர்களாகவும், பவுண்டுகளாகவும் பார்க்கக் கூடாது. அவர்களது பணிச்சூழல் வித்தியாசமானது; உலகளாவிய வாய்ப்புகளையும், அனுபவத்தையும், பரிச்சயத்தையும் உடையது. அவர்களது இந்த அனுப வங்கள், நம்மை, புதிய திசையில் வழிநடத்திச் செல்ல வேண்டும்.

குஜராத்தில் செயல்படுத்திய தைப் போன்று ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர வேண்டும். விதிமுறை களை தீவிரமாக பின்பற்ற வேண் டும். வளர்ச்சியை எட்டுவதில் மாநிலங்களுக்கிடையே ஆரோக் கியமான போட்டி உள்ளது. இது மிகவும் நல்ல விஷயமாகும்.

நாடு சுதந்திரமடைந்து 66 ஆண்டு களாகியும் நல்லாட்சியை பெற முடியாத நிலை உள்ளது. ஆற்றல் நிறைந்த தேசத்தை முன்னேற விடாமல் பின்னுக்கு இழுப்பது மோசமான நிர்வாகம்தான். சிறந்த ஆட்சி நிர்வாகத்தைத் தரக்கூடிய வகையிலும், சவால்களை எதிர் கொள்ளக்கூடிய வகையிலும் நாட்டின் தலைமை செயல்பட வேண்டும்.

இன்னும் 5 ஆண்டுகளுக்குப் பின் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாள் விழாவை மத்திய அரசு சிறப்பாக கொண் டாட வேண்டும். அதே போன்று, மகாத்மா காந்தி தென்னாப்பிரிக் காவிலிருந்து திரும்பி வந்த நூற் றாண்டு விழாவையும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

 

நான் பிரதமரின் கருத்தோடு ஒத்துப்போகிறேன். இந்தியாவிற்கு நல்ல காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி, நான் வேறு எதுவும் சொல்லப் போவதில்லை. அந்த நல்ல காலத்திற்காக, நாம், நான்கு அல்லது ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். எப்படியானாலும், இந்தியாவிற்கு நல்ல காலம் காத்திருக்கிறது என்பதை, நான் உறுதியாகச் சொல்கிறேன். வெளிநாடு வாழ் இந்திய முதலீட்டாளர்கள், தற்போது, மாநில அரசுகளோடு நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்வதை விரும்புகின்றனர்.

லோக் ஆயுக்தா’ மற்றும், ‘லோக்பால்’ போன்றவை, ஊழல் நடந்த பின் விசாரிப்பவை. ஊழலே நடக்காமல் செய்ய வேண்டும். குஜராத்தில், ஆசிரியர் நியமனத்தில் நடக்கும் ஊழலைத் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுற்றுச்சூழல் தொடர்பான விண்ணப்பங்களை, இணையத்தில் தான் விண்ணப்பிக்க முடியும். இதன் மூலம், வெளிப்படைத் தன்மை வந்துவிட்டது; விரைந்து நடவடிக்கை எடுக்க முடிகிறது. குஜராத்தில், ஆரம்பப் பள்ளிகளும், தர அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. இதனால் கல்வி மேம்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். இந்தாண்டில் வர உள்ள பார்லி., தேர்தலுக்குப் பின், புதிய அரசு அமைய இருப்பதை சுட்டிக் காட்டிய மோடி, தான் அமைக்க உள்ள சர்தார் படேல் சிலை பணிக்கு, ஒத்துழைப்பு அளிக்கும்படி, வெளிநாடு வாழ் இந்தியர்களை கேட்டுக் கொண்டார்.

Narendra Modi addresses NRIs at Special Interactive Session on Gujarat

Narendra Modi addresses NRIs at Special Interactive Session on Gujarat

Narendra Modi addresses NRIs at Special Interactive Session on Gujarat

Narendra Modi addresses NRIs at Special Interactive Session on Gujarat


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service