இந்தியாவின் மொத்த மின்தேவையில் 35 சதவிகிதத்தை குஜராத் மட்டுமே பூர்த்திசெய்யும்”

October-4-13

நரேந்திர தாமோதர் தாஸ் மோடி, பிரதமர் வேட்பாளர் தானா… அல்லது பிரதமரே ஆகிவிட்டாரா என சந்தேகத்தை உண்டாக்குகிறது, இந்தியாமுழுக்க அலையடிக்கும் ‘மோடி மேனியா’!

2004-ல் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்பதை முன்வைத்து தேர்தலை எதிர்கொண்ட பாரதிய ஜனதா கட்சி, இப்போது ‘துடிப்பான குஜராத்’

(Vibrant Gujarat) என்ற முழக்கத்துடன் நரேந்திர மோடியை காங்கிரஸுக்கு எதிராக நிறுத்தியிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பாஜக தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் அக்கா வானதி சீனிவாசன் ஆனந்த விகடனுக்கு தந்த சிறப்பு பேட்டியை .காண்போம்

நரேந்திரமோடி குஜராத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்த என்னவெல்லாம் செய்திருக்கிறார்? அவர்மீதான விமர்சனங்களுக்குப் பதில் என்ன?.. பட்டியலிடுகிறார் வானதி சீனிவாசன்.

”காற்றாலை மின்சாரம், கடல்அலையில் இருந்து மின்சாரம், சூரியமின்சாரம்… என குஜராத்தில் திட்டமிடப்பட்டுள்ள மாற்றுவழி மின் தயாரிப்புத் திட்டங்களும், அங்குள்ள மரபுசார்ந்த மின் உற்பத்தி திட்டங்களும் மொத்தமாக அமலுக்கு வரும் போது, இந்தியாவின் மொத்த மின்தேவையில் 35 சதவிகிதத்தை குஜராத் மாநிலம் மட்டுமே பூர்த்திசெய்யும். குறிப்பாக, நர்மதா நதிக்கால்வாய் மேல் 458 கிமீ. நீளத்துக்கு சூரியமின் தகடுகள் பதிக்கப்பட்டு சூரிய மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம், கால்வாய் நீர் ஆவியாவது தடுக்கப்படுவதோடு, அசுத்தமாகாமலும் காப்பாற்றப்படுகிறது. இந்த வளர்ச்சியைத் தான் நாங்கள் மொத்த இந்தியாவுக்கும் கொண்டுவருவோம் என்கிறோம்.

ஓர் அரசு, லாபத்தைமட்டுமே பார்க்க கூடாது என்கிறார்கள். இதை நான் ஏற்கிறேன். ஆனால் தனது துறைகளில் லாபம்ஈட்டும்படி அரசு இயங்கினால் தானே, மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதிகிடைக்கும்? கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தின் வளர்ச்சியை வேறு எந்தமாநிலத்துடன் ஒப்பிட்டாலும் உயர்வானது தான். ‘வளர்ச்சி’ என்று வரும்போது மற்றவர்களுக்கு ஓர் அளவுகோலும், குஜராத்துக்கு ஓர்அளவுகோலும் வைப்பது எதனால்? குஜராத்தின் வளர்ச்சியை நாங்கள் பேசும்போது எல்லாம், உடனே 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகள் குறித்து திரும்பத்திரும்பப் பேசுகின்றனர். எனில், முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளின் போது நடைபெற்ற வன்முறைகளில் இருந்து இதைத் தொடங்கவேண்டும்.

எனக்கு ஒருவிஷயத்தை மட்டும் சொல்லுங்கள்… குஜராத்தில் நல்ல சாராயமும் இல்லை; கள்ளச்சாராயமும் இல்லை. பூரண மதுவிலக்கை ஏற்றுக்கொண்டு, அதன் மூலம் வரும் பாவப்பணத்தை மறுத்து ஆட்சிநடத்தும் மோடியின் ஆட்சி எப்படி மக்களுக்கு நன்மையற்றதாக இருக்கும்?”

”ஆனால், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், பிரசவமரணங்கள், ஆண்பெண் விகிதாசாரம், வறுமைக்கோட்டுக்கு கீழ் ஏராளமாக உள்ளமக்கள்… போன்ற அடிப்படை விஷயங்களில் குஜராத் இன்னும் பின்தங்கியே இருக்கிறதே?”

” ‘மோடி ஏன் 98 ரன்கள்மட்டுமே அடித்திருக்கிறார்… 100 ரன்கள் ஏன் அடிக்கவில்லை?’ என்று கேட்பதைப்போல இருக்கிறது இது. மோடி கடந்த 10 ஆண்டுகளாகத் தான் குஜராத்தை ஆட்சிசெய்கிறார். இந்த குறுகியகால இடைவெளியில் அவர் செய்துள்ள சாதனைகளைத் தான் நாங்கள் பிரசாரம்செய்ய முடியும். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் குஜராத்தில் அதிகம் உள்ளனர் என்பதை எங்களுக்கு எதிரான பிரசாரமாகப் பேசுகிறார்கள். ஆனால், குஜராத்தின் பெரும் பகுதி மக்கள் சைவ உணவு உண்பவர்கள். சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு புரதச்சத்து மற்றும் இரும்புச் சத்துக் குறைபாடு இருப்பது இயல்பு. இதைமாற்ற, அரசு பல திட்டங்களைத் தீட்டியுள்ளது என்றபோதிலும், இது சமூகத்தின் உணவுப்பழக்கத்துடன் தொடர்புடையது!”

”உலகிலேயே குஜராத்தில் தான் அதிகளவு வாடகைத்தாய்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆண்டுக்கு சராசரியாக, 30 ஆயிரம் குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள். இதன்மூலம் குஜராத்துக்கு வருடத்துக்கு 1,000 கோடி ரூபாய் அந்நியச்செலாவணி கிடைக்கிறது. பெண்களின் கர்ப்பப்பையை வாடகைக்கு விடுவதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?”

”வாடகை தாய்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்தமாக இந்தியாமுழுக்கவே அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இதை ஏன் நீங்கள் அந்நிய செலாவணியுடன் இணைத்துப்பார்க்க வேண்டும்? வேறு ஏதோ ஒருமாநிலத்தில் வாடகைத் தாய்க்குக் கொடுக்கப்படும் பணமும் அந்நிய செலாவணிக் கணக்கில் தான் வரும். வாடகைத் தாய் முறையை மத்திய அரசு அனுமதித்துள்ளதால் தான், அது நடைபெறுகிறது என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.”

”2002-ம் ஆண்டு குஜராத் இனப்படுகொலைகளில் மோடிக்கு உள்ள தொடர்பையும் மறுப்பீர்களா?”

”2002-ம் ஆண்டு நடந்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை, ‘2000… 3000′ என்றெல்லாம் மீண்டும் மீண்டும் பொய்யாக திரித்துக்கூறப்படுகிறது. ஆனால், கணக்கெடுப்பின்படி அந்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 856பேர்தான். இதில் 254 பேர் இந்துக்கள். ஆக, இறந்த அனைவருமே இஸ்லாமியர்கள் அல்ல. இந்த உண்மைகளை மறைத்து விட்டு நரேந்திரமோடிதான் அந்த வன்முறைகளை முன்னின்று நடத்தினார் என சொல்வது பொய்ப்பிரசாரம். அந்தச் சம்பவத்துக்கும் பாஜக-வுக்கும் மோடிக்கும் எந்தத்தொடர்பும் இல்லை!’ என்றார்


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service